பக்கம்:சிறுவர் கலைக் களஞ்சியம்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அetதசரஸ் படும். சில நாட்களுக்குப் பின் அவை அடங்கி, காய்ந்து உதிர்ந்துவிடும். இக் கொப்புளங்கள் வந்த இடங்களில் தழும்புகள் காணப்படும். இதனால் நம் தோல் விகாரமாகக் காட்சி தரும். இந்நோய்மாரி எனும் தெய்வத்தால் வருவதாக முன்பு மக்களால் நம்பப் பட்டதால் இது 'அம்மை நோய்' என அழ்ைக்கப்ப்ட்லாயிற்று. இந்நோய் 'வைசூரி' என அழைக்கப்படுவதும் உண்டு. . - இதில் இரு வகைகள் உண்டு. ஒன்று பெரியம்மை, மற்றொன்று சின் னம்மை. இதில் பெரியம்மை நோயே மிகக் கடுமையானது. இது உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடியது. இது முகத்தில் குறிப்பாக கண் பகுதி யில் வரும்போது கண் குருடாகவும் நேரிடுகிறது. நோய் தீர்ந்த பின் முகத்தில் கொப்புளங்கள் வடுக்களாக அமைந்து முக அழகைக் கெடுத்து விடும். சின்னம்மை நீர்க் கொளுவான்’ என்றும் அழைக்கப்படுகிறது. இது அவ்வளவு கடுமையானது அன்று. இதைப் போன்றதே தட்டம்மை’ நோய். இந்நோய் வந்தால் உடனே தழும்பு தழும்பாக ஆகிவிடும். இந் நோய்கள் பெரும்பாலும் காற்றின் மூலம் குழந்தைகளையே அதிகம் தொற்றும். - பெரியம்மையும் சின்னம்மையும் பெரும்பாலும் ஒரே ஒரு முறைதான் வரும்.அப்படி வந்தால் தடுப்புச் சக்தி யை உடல் பெற்றுக் கொண்டு விடும். ஆனால் தட்டம்மை குழந்தைகளுக்கு அடிக்கடி வரும். இன்று அம்மை நோய் பெரும் பாலும் உலகிலிருந்தே ஒழிக்கப்பட்டு தழும்பு ஏற்பட்டிருக்கும். 25 விட்டதெனலாம். இந்தியாவில் இந் நோய் இல்லை என்றே கூறலாம். 'இருப்பினும் குழந்தைப் பருவத் திலே அம்மை குத்தித் தடுத்துக் கொள்வது நல்லது. அம்மை குத்தல்: அம்மை நோய் தொற்றாமல் தடுப்பதற்காகவே குழந் தைகளுக்கு அம்மைப்பால் குத்துவது "அம்மை குத்தல் ஆகும். இதை வாக்சினேசன்' என்று ஆங்கிலத்தில் கூறுவார்கள். குழந்தைகளுக்கு ஒரு துளி அம் ம்ைப்பாலைக் கையில் வைத்து அதன் மீது அம்மை ஊசியை வைத்துத் திருகுவார்கள். அந்த இடத்தில் நான் காவது நாள் சிவந்த கொப்புளம் உண்டாகும். பத்து நாட்களுக்குப் பின் அக்கொப்புள்ம் காய் ந் து உதிர்ந்துவிடும். அந்த இடத்தில் குத்தப் பட்ட அம்மைப்பால் இரத்தத்தில் கலந்து அம்மைநோய் எதிர்ப்புச் சக்தியை உண்டாக்குகிறது. மாட்டம்மைப் பாலை எடுத்து மணி தர்களுக்குப் போடும் முறையைக் கண்டறிந்தவர் எட்வர்ட் ஜென்னர் என்பவராவார். இவர் இம்முறையை 1796ஆம் ஆண்டு கண்டுபிடித்துச் செயல்படுத்தினார். குத்தப்பட்ட அம்மைப் பாலின் ஆற்றல் நாளடைவில் குறையத் தொடங்கும். எனவே, மூன்றாண்டு கட்கு ஒரு முறை அம்மை குத்திக் கொள்வது நலம். - அமிர்தசரஸ்: இது பஞ்சாப் மாநி லத்தில் உள்ள பெரிய நகரம், இது சீக்கிய சமயத்தவர்களின் புனித