பக்கம்:சிறுவர் கலைக் களஞ்சியம்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 குடிசைத் தொழில் ஆகியன இவர்கள் தொழிலாகும். மண்ணாலும் மரத்தா னும் ஆன வீடுகளிலும் கூடாரங்களி லும் வாழ்கின்றனர். இவர்கள் சூரிய னையும் சந்திரனையும் தெய்வங் களாக வணங்குகின்றனர். இவர்களின் முன்னோர்கள் நாகரி, கம் மிகுந்தவர்களாகக் கருதப்படுகின் றனர். இன்கா நாகரிகம், ஆஸ்டெக் நாகரிகம், மாயா நாகரிகம் என்பன அவை. இவர்கள் தொகை இன்று அமெரிக்காவில் குறுகிக் கொண்டு வருகிறது. அமெரிக்க ஐக்கிய நாடுகள்: நாம் அமெரிக்கா என்று அழைக்கும் கண் டத்தில் மிகப் பெரும் பகுதியாக அமெ ரிக்க ஐக்கிய நாடுகள் அமைந்துள் ளன. ஐம்பது மாநிலங்கள் ஒன்றி ணைந்த கூட்டாட்சி அமைப்பாகும். இதில் மிகப் பெரிய மாநிலம் அலாஸ்கா ஆகும். மேற்கே பசிபிக் மாகடலும் கிழக்கே அட்லாண்டிக் மாகடலும் வடக்கே கனடா நாடும் தெற்கே தென் அமெரிக்கா நாடுகளும் எல்லைகளாக அமைந்துள்ளன. இந் நாட்டின் வளத்திற்கு ஆதாரமாக மிசி சிபி, மிசெளரி போன்ற பேராறுகளும் பல்வேறு மலைத் தொடர்களும் அமைந்துள்ளன. மாபெரும் ஏரிகள் பலவும் இங்குள்ளன. அமெரிக்க ஐக்கிய நாடுகள் மிகப் பரந்த நாடாக அமைந்துள்ளதால் ஒரு பகுதி மழைவளம் மிக்கதாக உள் ளது. அதே சமயம் மற்றொரு பகுதி மழை அதிகம் பெறாத வறட்சிமிக்க பாலைவனப் பகுதியாக உள்ளது. ஆறுகள் பாயும் பகுதிகளிலெல்லாம் வளமான விளைநிலப் பகுதிகளாக உள்ளன. காடுகளும் மலைகளும் புல் வெளிகளும் இங்கு மிகுதி. அயர்லாந்து உலகிலேயே மிக அதிகமான கோதுமையும், மக்காச்சோளமும் பருத்தியும் இங்கு விளைகின்றன. பால் பண்ணைகளும் இங்கு ஏராளம் உண்டு. இங்குக் கிடைக்கும் உலோகங்கள் நிலக்கரி, இரும்பு, அலுமினியம், பெட் ரோல் ஆகியவை குறிப்பிடத்தக்க தாகும். எந்திர உற்பத்தியில் இந் நாடு உலகில் முன்னணி வகிக்கிறது. இந்நாட்டின் தலைநகர் வாஷிங் டன் ஆகும். நகரங்களில் மிகப் பெரியது நியூயார்க். இங்கு ஐ.நா. அவையும் புகழ் பெற்ற சுதந்திரச் சிலையும் உள்ளது. அமெரிக்கர்களில் பெரும்பாலோர் முன்னூறு ஆண்டுகட்கு முன்பு இங்கி லாந்திலிருந்து குடியேறியவர்கள் ஆவர். இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு சுதந்திரப்போர் நடத்தி இங்கி லாந்திலிருந்து விடுதலை பெற்றார் கள். அமெரிக்க ஐக்கிய நாடுகளின் முதல் குடியரசுத் தலைவர் ஜார்ஜ் வாஷிங்டன் ஆவார். இங்குக் கறுப்பு இனத்தவர்கள் நிறைய வாழ்கின்றனர். இந்தியர்கள் உட்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந் தவர்கள் இங்கே பணி நிமித்தம் குடி யேறி வாழ்கின்றனர். அயர்லாந்து: இங்கிலாந்துக்கு அருகாக மேற்கில் அமைந்திருப்பது அயர்லாந்து. இந்நாட்டின் வடபகுதி பிரிட்டனால் ஆளப்படுகிறது. தென் பகுதி சுதந்திரக் குடியரசாக உள் ளது. அங்குள்ளோர் கத்தோலிக்கக் கிருஸ்தவர்கள் ஆவர். இவர்கள் பேசும் மொழி ஐரிஸ் மொழியாகும். பிராட்டஸ்டாண்டு கிருத்தவர்களான