பக்கம்:சிறுவர் கலைக் களஞ்சியம்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 வட அயர்லாந்து மக்கள் ஆங்கிலம் பேசுகின்றனர். அயர்லாந்து நாடு மலைகளால் சூழப்பட்டது. அங்கு பல ஆறுகள் ஒடுகின்றன. ஏரிகளும் நிறைய உண்டு. இதனால் பசும்புல் தரை களுக்குப் பஞ்சமில்லை. விவசாயமும் மீன்பிடித்தலும் முக்கி யத் தொழில்களாகும். இங்குக் கம்பளி நெசவு போன்ற கைத்தொழில்கள் செழிப்பாக உள்ளன. அயோடின்: நாம் எப்போதாவது கீழே விழுந்து காயமேற்படும்போது அதன் மீது டிங்க்ச்சர் ஆஃப் அயோ டின்' என்ற கரு நீல மருந்து தடவு வதைப் பார்த்திருக்கலாம். இந்த மருந்தைக் காயத்தின் மீது தடவும் போது கடும் எரிச்சலாக இருக்கும். இம்மருந்து தடவப்பட்டால் சீழ் பிடிக் காது. விரைந்து காயம் ஆறிவிடும். இம் மருந்தில் அயோடின் கலந்திருப் பதால்தான் அதற்கு இப்பெயர். கருநீல அயோடின் ஒரு தனிமம் ஆகும். இதனுடைய அணு எண் 58. முதன் முதலில் அயோடின் ஒரு தனி மம் என்பதைக் கண்டுபிடித்தவர் கே. லூசாக் எனும் வேதியியல் விஞ் ஞானி ஆவார். இத்தனிமம் கடற்பாசிகளிலிருந்தும் காலிச்சே எனும் வெடியுப்புக் கனிமத் திலிருந்தும் பிரித்தெடுக்கப்படுகிறது. நீரில் சிறிதளவே கரையும் அயோ டின் எரிசாராயத்தில் (ஆல்கஹால்) மிகுதியாகக் கரையும் இயல்புள்ளது. அயோடின் மருந்துப் பொருட்கள் தயாரிக்க அதிகம் பயன்படுகிறது. நம் உடம்பில் ஒரு குறிப்பிட்ட அளவு அயோடின் இருக்க வேண்டும். இது உடலில் கூடினாலோ குறைந்தாலோ அtத்த சாஸ்திரம் தீங்கு உண்டாகும். குறைந்தால் கழுத்தின் முன் பக்கத்தில் பந்து போல் வீங்கித் தொல்லை தரும். இதனை அயோடின் கலந்த மருந் தைக் கொண்டு குறைக்கலாம். அதிக மானால் உடல் மெலியும்; படபடப்பு ஏற்படும். அயோடினை நேரிடை யாக உண்ண முடியாது. அதனால் சமையல் உப்போடு சிறிதளவு சோடி யம் அயோடைடு எனும் உப்பைக் கலந்து உணவோடு உண்பார்கள். ஒளிப்படத் தொழிலிலும் சாயத்தொழி லும் அயோடின் பயன்படுகிறது. அர்த்த சாஸ்திரம்: ஆளும் மன்ன னையும் ஆளப்படும் மக்களையும் பற்றிய சாஸ்திர நூல். அரசாளும் மன்னர்களின் கடமைகளையும் ஆட் சியின் நோக்கங்களையும் விரிவாக விவரிக்கிறது. * வடமொழியாகிய சமஸ்கிருதத்தில் பல அர்த்த சாஸ்திரங்கள் உள்ளன. அவற்றுள் சிறந்ததாக விளங்குவது சாணக்கியர் எனும் கெளடில்யர் எழு திய அர்த்த சாஸ்திரம் ஆகும். இவரது இயற்பெயர் விஷ்ணுகுப்தர் என்பதாகும். குடும்பப் பெயர் காரண மாக கெளடில்யர் என்றும் தனது நாட்டுப் பெயரை யொட்டி சாணக்கி யர் என்றும் அழைக்கப்பட்டார், சூழ்ச்சியில் வல்லவரான இவர் சந்திர குப்த மெளரியரின் அமைச்சராக இருந்தவர். இவர் எழுதிய அர்த்த சாஸ்திரம் ஆராயிரம் சுலோகங்கள் அடங்கியது. ஒரு சுலோகம் என்பது 32 எழுத்து கள் கொண்டதாகும். 180 தலைப்பு களில் அரசன் கடமைகளையும் ஆட்சி முறைகளையும் அமைச்சர் களின் பங்கு பணியையும் முப்படை களின் போர்ச் செயல்களையும் விரி