பக்கம்:சிறுவர் கலைக் களஞ்சியம்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரசமைப்பு வாக விளக்குகிறது. மற்றும் வணிகம், விவசாயம், மக்களின் கடமை ஆகியன பற்றியும் விரிவாகக் குறிப் பிடுகிறது. அரக்கு இது ஒருவகை இயற்கைப் அசின் ஆகும். லாக்கிபெர் லாக்க' எனும் ஒருவகைப் பூச்சியின் உடலி லிருந்து கசியும் திரவம் உலர்ந்து பிசின் ஆகிறது. அரக்குப் பூச்சிகள் மூட்டை பூச்சி இனத்தைச் சேர்ந்தவை. சிலவகை மரக் காற்றை உறிஞ்சி உணவாகக் கொண்டு வாழ்கின்றன. தமது பாது காப்புக்கென உடலிலிருந்து கசியும் அரக்கு திரவத்தைக்கொண்டு தம் மைச் சுற்றிக் கூடுபோல் அமைத்து வாழ்கின்றன. ஆண் பூச்சியை விட் பென் அரக்குப் பூச்சியிலிருந்தே அதிக அரக்குத் திரவம் கசியும். இப் பூச்சிகள் வாழும் மரங்களின் தன்மை இயப் பொறுத்து அரக்கின் குணம் அமையும். பூவரசு, இலந்தை, பல: போன்ற் மரங்களில் அரக்குப் பூச்சி கள் கூடுகட்டி வாழும். இந்தியாவில் மத்தியப் பிரதேசம், பீகார், கேரளம், அஸ்ஸாம், கர்நாட கம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களி லிருந்து அரக்கு சேகரிக்கப்படுகிறது. இசைத் தட்டுகள் செய்வதற்கும் மின் கருவிகளில் பயன் படுத்தவும் மெருகு எண்ணைய் தயாரிக்கவும் அரக்குப் பயன்படுகிறது. அரசமைப்பு ஒவ்வொரு நாட்டிலும் அரசாங்கத்தை அமைப்பதற்கும் அதை நடத்தி வருவதற்கும் விதி முறைகள் வகுக்கப்பட்டுள்ளன.இந்த விதி முறைகளின் தொகுப்புத்தான் அரசமைப்பு (Constitution) என்ப தாகும். ஒரு நாட்டின் அரசாங்கம் 83 இந்த அரசமைப்பு வழங்கும் அதிகா ரத்திற்கு இணங்கியே இயங்கி வரு கிறது. அரசமைப்பின்படி ஒவ்வொரு அர சாங்கத்திற்கும் மூன்று உறுப்புகள் உள் ளன. . 1. சட்ட மன்றம் : இது அவ்வப் போது மக்களுக்குத் தேவையான சட்டங்களையும் வி தி க ைள யும் இயற்றுகிறது. - 2. நிருவாகத் துறை: இது சட்ட மன்றம் இயற்றும் சட்டங்களைச் செயல்படுத்துகிறது. வரிகள் மூலம் அரசுக்கு வருவாய் ஈட்டுகிறது. இந்த வருவாயை மக்கள் நலனுக்காகச் செல விடுகிறது. நாட்டின் அமைதியையும் ஒழுங்கையும் நிலைநாட்டுகிறது. 3. நீதித்துறை : குடிமக்களிடை யேயும், குடிமக்களுக்கும் அரசாங்கத் திற்குமிடையேயும் எழும் வழக்கு களை விசாரித்து நீதி வழங்குவது இதன் பொறுப்பு ஆகும். நாட்டுக்கு நாடு அரசமைப்பு வேறுபடும். எனி னும் எல்லா அரசமைப்புகளிலுமே அரசாங்கத்தில் இந்த மூன்று அமைப் புகள் உண்டு. இந்திய அரசமைப்பு: இந்தியா குடியரசு முறை அரசமைப்பை ஏற் றுக் கொண்டிருக்கிறது. இந்த அரச மைப்பு 1950 ஜனவரி 26 முதல் நடைமுறைக்கு வந்தது. இதன்படி இந்திய மாநிலங்களைக் கொண்ட ஓர் ஒன்றியம் (Union) ஆகும். ஒன்றி ய்த்தின் ஆட்சிப் பொறுப்பு முழுவதும் குடியரசுத் தலைவரிடம் உள்ளது. அவர் ஒன்றியத்தின் முப்படைகளின் தலைமைத் தளபதியாகவும் இருக்கி றார். சட்டங்கள் செய்தல், சட்டங் களைச் செயற்படுத்துதல், நீதியை நிலைநாட்டுதல் ஆகிய மூன்று அதி