பக்கம்:சிறுவர் கலைக் களஞ்சியம்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காரங்கள் அவருக்கு உண்டு. இந்த மூன்று கடமைகளையும் செய்ய அவ ருக்கு மூன்று நிறுவனங்கள் உதவு கின்றன. 1. நாடாளும்ன்றம் இதன் உறுப்பினர்களை மக்கள் தேர்ந் தெடுக்கின்றனர். இது சட்டங்களை இயற்றுகிறது. 2. அமைச்சரவை: இது சட்டங்களைச் செயற்படுத்து கிறது. 3. உச்ச நீதி மன்றம்: இது நீதியை நிலைநாட்டுகிறது. இந்திய அரசமைப்பு, நாட்டின் குடி மக்கள் அனைவரும் சட்டத்தின் முன்பு சமமானவர்கள் எனக் கூறு கிறது. குடிமக்கள் எல்லோருக்கும் அடிப்படை உரிமைகளை வழங்கு கிறது. இந்த உரிமைகளை அரசு பறிக்காமல் பார்த்துக்கொள்வது உச்ச நீதி மன்றத்தின் கடமையாகும். இந்தியக் குடிமக்கள் நாட்டுக்கு ஆற்றவேண்டிய அடிப்படைக் கட மைகளை அரசமைப்பு வகுத்துக் கூறியுள்ளது. இந்திய ஒன்றியத்தில் எல்லா மாநிலங்களும் உறுப்புகளாகும். ஒன் றிய அரசாங்கத்தைப் போலவே, ஒவ் வொரு மாநிலத்திலும் மாநில அர சாங்கம் அமைந்துள்ளது. அங்கும் மக்கள் தேர்ந்தெடுக்கும், சட்டமன்ற மும் முதலமைச்சர் தலைமையில் அமைச்சரவையும் உண்டு. மாநில அரசாங்கத்தின் ஆட்சித் தலைவர் ஆளுநர் (Governor) ஆவார். அவர் பெயரிலேயே மாநில நிர்வாகம் நடை பெறுகிறது. ஒவ்வொரு மாநிலத்திலும் உயர் நீதிமன்றம் ஒன்று உள்ளது. ஒன்றியத்தின் அரசாங்கத்திற்கும், மாநில அர சாங் க த் தி ற்கு ம் உரிய பொறுப்புகளை عهN gr 6F மைப்பு வகுத்துரைக்கிறது. நாட் டின் ப து காப்பு (இராணுவம்), அரசாங்கம் இரயில் போக்குவரத்து, கப்பல், விமா னப் போக்குவரத்து, அஞ்சல் தந்தி போன்ற துறைகள் மைய அரசாங் கத்தின் பொறுப்பில் உள்ளன.கல்வி, சுகாதாரம், காவல், சாலைப் போக்கு வரத்து, மின்சாரம் போன்றவை மாநில அரசுகளின் பொறுப்பில் இருக்கின்றன. எந்த எந்த பொருட் பாடுகள் குறித்து மைய அரசு, மாநில அரசு இரண்டும் சட்டங்கள் இயற்ற லாம் என்பதை அரசமைப்புத் தெளி வாகக் கூறுகிறது. அரசாங்கம்: மக்கள் அமைதியாக வும் மகிழ்ச்சியாகவும் சமாதானமாக வும் வாழப் பல்வேறு சட்ட திட்டங்க ளோடு அமைவதுதான் அரசாங்கம். அரசு என்றால் அதற்கு அடிப் படையான சில தன்மைகள் உண்டு. முதலாவதாக, நிலையான நிலப்பரப்பு எல்லை; இரண்டாவதாக, ஒன்றி ணைந்த மக்கள் தொகுதி; மூன்றாவ தாக, உள்நாட்டு அல்லது வெளி நாட்டு அபாயங்களிலிருந்து பாது காப்பு. இவை அனைத்தையும் கொண் டதே அரசு. அரசின் குறிக்கோளைச் செவ்வனே நிறைவேற்ற அமையும் அங்கமே அரசாங்கம் ஆகும். அரசாங்க அமைப்பில் பலவகைகள் உள்ளன. முடி மன்னரால் ஆளப் படும் ஆட்சி முடியாட்சி. அரசர் இருந் தும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளால் ஆளப்படும் ஆட்சி குடியாட்சியோடு கூடிய முடியர சாகும். இன்று இதற்குச் சிறந்த சான் றாக இங்கிலாந்து விளங்குகிறது.ஒரு வரே அனைத்து அதிகாரங்களையும் மேற்கொண்டு ஆட்சி நடத்துவது சர் வாதிகார ஆட்சியாகும். குடிமக்க ளால் தேர்ந்தெடுக்கப்படும் மக்கள் பிரதிநிதிகளைக் கொண்ட ஆட்சி மக்களாட்சி அல்லது குடியரசு ஆட்சி