பக்கம்:சிறுவர் கலைக் களஞ்சியம்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அலெக்சாண்டர் பிளமிங் தரின் வெற்றிகளும் குறிக்கப் பட்டுள்ளன. இங்கு நடைபெறும் கும்பமேளா விழாவுக்கு இலட்சக்கணக்கான இந்து பக்தர்கள் வந்து செல்வார்கள். அலுமினியம்: அலுமினியம் ஒரு வகை வெண்மைநிற உலோகம் ஆகும். முதன் முதலில் மற்ற உலோ கக் கலவையிலிருந்து இதைத் தனி யாகப் பிரித்தெடுத்தவர் வோலர் (1887) என்ற வேதியியல் அறிஞர் ஆவார். இன்றைய முறையைக் கண் டறிந்தவர் ஹால் என்னும் அமெரிக்க மாணவராவார். அலுமினியம் தனியாகக் கிடைப்ப தில்லை. பூமியின் மேல் அடுக்கில் ஆக்சிஜன், சிலிகன் ஆகிய தனிமங் களுக்கு அடுத்த நிலையில் அதிகம் கிடைப்பது அலுமினியமே ஆகும். இவ்வுலோகம் பாக்சைட், கிரியோ லைட், சிலவகை களிமண்கள், கற் பாறைகளோடு கலந்திருக்கும். அதிக அளவில் பாக்சைட்டிலிருந்தே இந்த உலோகம் பிரித்தெடுக்கப்படுகிறது. இதுவே சிக்கனமுறையாகவும் கருதப் படுகிறது. இது நச்சுத்தன்மை இல்லாத மலி வான உலோகமாக இருப்பதால் அதிக அளவில் பாத்திரங்கள் தயாரிக் கப் பயன்படுத்தப்படுகிறது. அழுத் தம் மிகுந்த, மின்சாரத்தை செம்பை விட எளிதாகக் கடத்துவதால் மின் கம்பிகள் செய்யப் பயன்படுத்துகிறார் கள். துருப்பிடிப்பதைத் தடுக்க தந்தி விளக்குக் கம்பங்கள் மீது பூசப்படும். ஜரிகைக் காகிதங்கள் தயாரிக்கவும் இஃது பயன்படுத்தப்படுகிறது. இத் தனிமத்தின் அணு எண் 18 ஆகும். அலெக்சாண்டர் கிரகாம் பெல்: இவர் தொலைபேசியைக் கண்டு 87 பிடித்த விஞ்ஞானி.இவர் ஸ்காட்லாந் தில் உள்ள எடின்பரோவில் 1847 -ஆம் ஆண்டு பிறந்தார். இவருடைய தந்தை செவிடர்களுக்குக் கற்பிப்ப திலும் குரல் உறுப்புப் பயிற்சி, பேச் சுத் திருத்தப் பயிற்சி தருவதிலும் வல் லவராகத் திகழ்ந்தார். எனவே இளமை முதல் குரல் ஒலிகளை மீண் டும் உருவாக்கிக் க்ாட்டுவதில் ஆர்வ ருந்தார். 5 - - -سية. முடையவர கிரக்ள்ம் பைக் அமெரிக்காவில் பாஸ்டன் நகரில் 1871 ஆம் ஆண்டு குடியேறினார். அங்குதான் இவர் 1875ஆம் ஆண் டில் தொலைபேசியை முதன் முதலா கக் கண்டுபிடித்து வடிவமைத்தார். இவர் பின்னர் செவிடர்களுக்குக் காது கேட்கும் கருவி கண்டுபிடிப் பதில் பேரார்வத்துடன் ஈடுபட்டார். 1922 ஆம் ஆண்டில் காலமானார். அலெக்சாண்டர் பிளெமிங். இவர் சில நோய் நுண்மங்களின் வளர்ச்சி யைத் தடைசெய்யப் பயன்படும் பெனிசிலின்' என்ற மருந்தைக் கண்டுபிடித்தவர். இவர் ஸ்காட்லாந் திலுள்ள லாக்ஃபீல்டு என்னும் ஊரில் 1881ஆம் ஆண்டில் பிறந்