பக்கம்:சிறுவர் கலைக் களஞ்சியம்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 காரணமாக அமைகின்றன. அதிலும் அலைகள் உருவாகக் காரணமாக அமையும் பெளர்ணமி மற்றும் அமா வாசையன்று சந்திரன் ஈர்ப்பும் சூரிய னின் ஈர்ப்பும் ஒரே சமயத்தில் அமை வதால் அன்று அலைகளும் பெருமள வில் எழுகின்றன. இச்சமயங்களில் தென்னை மர உயரத்திற்குக் கடல் அலைகள் எழுவதும் உண்டு. பூமி அதிர்ச்சி ஏற்பட்டாலும் பூகம் பம் உண்டானாலும் கடலடியில் உள்ள எரிமலைகள் வெடித்தாலும் கடல் கொந்தளிப்பும் அலைகளின் ஆர்ப்பரிப்பும் மிக அதிகமாக அமை யும். கடல் அலைகளிலிருந்து மின்சக்தி உற்பத்தி செய்ய இயலும் என அண் மைக் காலத்தில் அறிவியலாளர்கள் கண்டுபிடித்துள்ளார்கள். கடலலை கள் மூலம் மின்சாரம் தயாரிக்கும் முயற்சி நம் நாட்டிலும் நடைபெற்று வருகிறது. அவதானம்: இது நி ைன வா ற் ற லைச் சோதித்து அறியும் நினைவுக் கலையாகும். இக்கலை ஓர் நினை வாற்றலோடு எதையும் ஊன்றிக் கவ னிக்கும் திறமுடையதாகும். ஒரே சமயத்தில் பல செயல்களைக் கண்டும் கேட்டும், தொடு உணர்வு மூலம் அறிந்தும் அவற்றை மனதில் பதிய வைத்து இறுதியில் நினை வாற்றலோடு இம்மியும் பிசகாது வெளிப்படுத்தவேண்டும். இதில் எத் தனை செயல்களை நினைவில் கொண்டு வெளிப்படுத்துகின்றாரோ, அந்த எண்ணிக்கைக் கேற்ப அவருக் குப் பட்டம் வழங்குவார்கள். ஒரே சமயத்தில் எட்டுச் செயல்கள் நடைபெற்றால் அஷ்டாவதானி என் பர். பதினாறு செயல்கள் செய்யின் அறுவை மருத்துவம் சோடசாவதானம் என்பர். நூறு செயல்கள் செய் தால் சதாவ தானி என்று அழைக்கப்படுவர். சதாவதானி செய்குத் தம்பிப் பாவலர் அண்மைக் காலத்தில் வாழ்ந்து மறைந்த நினைவுக்கலைஞர் ஆவார். இன்று இக்கலை மறைந்து கொண்டு வருகிறது. அறுவை மருத்துவம்: அது பண் டைக்காலம் முதல் இருந்துவரும் மருத்துவ முறையாகும். மனிதர்கள் அல்லது விலங்குகளுக்கு ஏற்படும் கடுமையான நோய்ப் பகுதியின் மேல் தோலைக் கத்தியால் கீறித் திறந்து, மருத்துவம் முடிந்தபின் மீண்டும் தைத்துவிடுவர். இவ்வகை மருத்து வம் செய்பவர் அறுவை மருத்துவர் என அழைக்கப்படுவார். மருத்துவ அறிவோடு அறுவை மருத்துவம் பற்றிய சிறப்பு அறிவும் திறமையும் பெற்றவரே அறுவை செய்ய முடியும். அறுவை மருத்துவம் செய்யும் போது நோயாளிக்கு நோவு தோன் றாமலிருக்க மயக்க மருந்து தருவார் கள். அறுவை மருத்துவம் செய்யும் முன் னர் நோயாளியை நன்கு பரிசோதிப் பர். நோயின் அல்லது விபத்துகளால் காயம் ஏற்பட்டிருப்பின் அவற்றின் தன்மையைக் கண்டறிவர். பின்னர் நோயாளிக்கு வேண்டிய அளவு தைரியமூட்டி தயார் செய்வர். அறுவை மருத்துவத்துக்கு 12 மணி நேரத்துக்கு முன்பே நோயாளி உண் பதை நிறுத்திவிட வேண்டும். மூன்று மணிநேரத்துக்கு முன்னதாக நீர் பருகுவதை நிறுத்திவிடவேண்டும், நிர்ணயித்த நேரத்தில் அதற்கென சிறப்பு ஏற்பாடுகளோடு அமைந்த அறுவை அரங்கினுள் நோயாளிக்கு