பக்கம்:சிறுவர் கலைக் களஞ்சியம்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணையும் கவரத்தக்கனவாகும். எத்தனையோ நூற்றாண்டுகளாகியும் இவை அழியாமல் அன்று போலவே இன்றும் அழகுடன் காணப்படுகின் றன. பாறையைக் குடைந்து உருவாக்கப் பட்ட இக்குகைக் கோயில்களின் சுவர் களில் சுண்ணாம்புச் சாந்தைப் பூசி, அது உலர்வதற்குள் ஒவியங்களைத் தீட்டியிருக்கிறார்கள். இதனால்தான் இவை இன்றும் பளிச்செனக் காணப் படுகின்றன. இவ்வோவியங்கள் புத்த ரின் வாழ்க்கையைச் சித்தரிக்கின்றன. புத்தரின் முழு உருவச் சிலைகள் இக் கோயில்களில் பெருமளவில் காணப் படுகின்றன. எனவே, இவற்றை உரு வாக்கியவர்கள் புத்த சமயத்தவர் களாக இருத்தல் வேண்டும். அஸ்ஸாம்: இந்தியாவின் வடகிழக் கேயுள்ள மாநிலம் ஆகும். இங்கு மழை மிகுதி. எனவே, ஆறுகள் நிறைந்த மாநிலம் ஆகும். இந்நதிப் பகுதிகள் மிகச் செழிப்பானவைகளா கும். உலகத்திலேயே மிக அதிகமாக மழை பெய்யும் புகழ் பெற்ற இடங் களில் ஒன்றான சிரபுஞ்சி இம் மாநிலத்தில்தான் உள்ளது. இம் மாநிலத்தின் விளைபொருள் களில் மிக முக்கியமானது அரிசி, தேயிலை, சணல் முதலியவைகளா கும். இங்குள்ள சுரங்கங்களிலிருந்து நிலக்கரியும் கண்ணாம்பும் வெட்டி யெடுக்கப்படுகின்றன. பெட்ரோலிய எண்ணையும் மிகுதியாகக் கிடைக் கிறது. பட்டு நெய்தல், தீக்குச்சி செய் தல், எண்ணெய் ஆட்டுதல் முக்கியக் குடிசைத் தொழிலாகும். ஆறுகள் மிகுதியாக இருப்பதால் போக்குவரதது பெரும்பாலும் நதிகள் மூலமே நடைபெறுகிறது. சாலைப் ஆக்சிஜன் போக்குவரத்தும் ரயில் போக்குவரத் தும் தரைவழியே நடைபெறுகின்றன. காட்டுவளம் நிறைந்த மாநிலங்களில் அஸ்ஸாமும் ஒன்றாகும். ஆக்சிஜன் இதை பிராணவாயு, உயிரகம் என்றும் சொல்வார்கள். நாம் அடிக்கடி காற்றை உள்ளே இழுத்துச் சுவாசிக்கிறோம். அவ்வாறு உள்ளிழுக்கும்காற்றில் பல வாயுக்கள் அடங்கியிருக்கின்றன. அவற்றில் ஐந் தில் ஒரு பங்காக அமைந்திருப்பது ஆக்சிஜன் எனும் பிராணவாயுவாகும். நாம்உயிர்வாழ இது இன்றியமையாது தேவைப்படும் வாயுவாகும். எனவே, இதை 'உயிர் வளி’ என்றும் அழைப் பதுண்டு. நாம் மட்டுமல்லாது விலங்கினங் களும் உயிர் வாழ இந்த வாயு மிக அவசியமாகும். இந்த வாயு நுரையீர லுள் சென்று இரத்தத்தைச் சுத்தம் செய்கிறது. ஆக்சிஜனை உள்ளே இழுத்து கரியமில வாயுவாகிய கார் பன் டை-ஆக்ஸைடை வெளியே விடு கிறோம். இவ்வாயு தாவரங்களுக்குத் தேவையாகும், நீருக்குள் வாழும் மீன் போன்ற நீர்வாழ் உயிரினங்கள் நீரில் கரைந்துள்ள ஆக்சிஜனை சுவாசித்து உயிர்வாழ்கின்றன. ஆக்சிஜன் காற்று வடிவில் உள்ள ஒரு தனிமம் ஆகும். நிலத்தின் மீது மிக அதிக அளவில் கிடைக்கும் தனி மம் இது ஒன்றேயாகும். இது உயிர் வாழ்வதற்கு மட்டுமல்லாது பல்வேறு வேதியியல் வினைகள் நிகழவும் கார ணமாக உள்ளது. காற்றிலிருந்து இதைத் தனியாகப் பிரித்தெடுக்க முடியும். . ஆக்சிஜனுக்குதனியே நிறம், மணம், சுவை எதுவுமில்லை. ஆக்சிஜனை அதிகம் குளிரூட்டினால் திரவமாக மாற்றம் அடையும்.