பக்கம்:சிறுவர் கலைக் களஞ்சியம்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆத்திரப் பிரதேசம் பலபகுதிகளில் வாழ்கின்றனர். இவர் கள் ஆதிக் குடிகள், பழங்குடியினர் என்றெல்லாம் அழைக்கப்படுகின் றனர். இவர்கள் நாகரிகம் குறைந்தவர் களாகவும் படிப்பறிவற்றவர்களாகவும் இருந்தபோதிலும் தங்களுக்கென்று சில கட்டுப்பாடுகளை விதித்துக் தோடா.பழங்குக கொண்டு சிறு சிறு குழுமங்களாக வாழ்பவர்கள். தங்கள் தலைவனின் சொற்படி நடப்பார்கள். ஆண்கள் வேட்டைக்குச் செல்வர். பெண்கள் வீட்டு வேலைகளை கவனிப்பர். இப்பழங்குடியினரையும் மற்றவர் களைப் போன்று முன்னேற்றுவிக்க அரசு திட்டமிட்டு நிறைய சலுகை கள் அளித்து வருகிறது. இந்தியா, இலங்கை, ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் இன்னும் பழங் குடி யினர் பலர் வாழ்ந்து வருகின்றனர். ஆந்திரப் பிரதேசம் இந்தியக் குடி யரசு மாநிலங்களில் ஒன்றாகும். தெற் கே தமிழ்நாட்டையும் மேற்கேகர்நாட கத்தையும் வடக்கே ஒரிசா, மத்தியப் பிரதேச மாநிலங்களையும் எல்லை களாகக் கொண்டது. கிழக்கு எல்லை யில் வங்காள விரிகுடா அமைந்துள் 4 ளது. இம் மாநிலத்தின் மொத்தப் பரப்பளவு 2. 75 இலட்சம் ச. கி. மீ. ஆகும். இது இந்தியாவின் ஐந்தாவது பெரிய மாநிலம் ஆகும். இம் மாநிலத்தின் ஆட்சி மொழி தெலுங்கு மொழியாகும். இந்தி மொழிக்கு அடுத்தபடியாக இந்தியா வில் அதிகம்பேர் பேசும் மொழி தெலுங்கு மொழியாகும். இங்கே உருது மொழியும் பேசப்படுகிறது. தலைநகர் ஐதராபாத் ஆகும். சமவெளிப் பகுதிகள் நிறைந்த ஆந்திர மாநிலத்தில் கோதாவரி கிருஷ்ணா, துங்கபத்திரா, வடபெண் ணை போன்ற பெரும் ஜீவ நதிகள் பாய்ந்து செழுமைப் படுத்துகின்றன. இங்கு நெல் மிகுதியாகப் பயிராகிறது. புகையிலை போன்ற பணப் பயிர் களும் அதிகம் பயிராகிறது. இம்மாநிலத்தில் உள்ள சிங்கரேணி சுரங்கங்களிலிருந்து நிலக்கரி எடுக் கப் படுகிறது. மங்கனிஸ், மைக்கா. செம்பு போன்ற தாதுப் பொருள்களும் ஆந்திரப் பிரதேசம் இம்மாநிலத்தில் அதிக அளவில் எடுக் கப்படுகிறது. விசாகப்பட்டினத்தில் கப்பல் கட்டும் தளம் உள்ளது.