பக்கம்:சிறுவர் கலைக் களஞ்சியம்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 ஆந்திர மாநிலத்தில் புகழ்பெற்ற புனிதத் தலங்கள் பல உள்ளன. அவற்றுள் குறிப்பிடத்தக்கது திருப் பதி, காளஹஸ்தி, பத்திராசலம் போன்ற கோயில்களாகும். ஆந்திரர்களிடையே சமுதாய விழிப் புணர்வை உண்டாக்க அரும்பாடு பட்டவர் கந்துகூரி விரேசலிங்கம் பந் துலு (1848.1919) ஆவார். பல சீர் திருத்த நூல்களை எழுதியுள்ள இவர் தெலுங்கு மொழியின் மறுமலர்ச்சிக் கும் பாடுபட்டுள்ளார். ஆப்கானிஸ்தானம்: இது தென் மேற்கு ஆசியாவில் உள்ள நாடு ஆகும். மலைகள் சூழ்ந்த இந்நாட் டின் தலைநகர் காபூல் ஆகும். வடக் கே ரஷியாவும் வடகிழக்கில் சீனாவும் கிழக்கிலும் தெற்கிலும் பாகிஸ்தா னும் இந்நாட்டின் எல்லைகளாக ۔ -\ .. 总 சோவியத் ரஷ்யா اص ح، و ہہ صے‘ a తో ஆப்கானிஸ்தான் அமைந்துள்ளன. 1,67,80,000 (1988) மக்களைக் கொண்ட இந் நாட்டின் மொத்தப் பரப்பளவு 6,47,497 ச.கி.மீ. ஆகும். தமிழ்நாட் டைப் போல் ஐந்து மடங்கு நிலப் பரப்பை கொண்டிருந்தும் மக்கள் தொகை பாதி கூட இல்லை. இங்கு வேளாண்மை முதன்மைத் தொழிலாகும். நாட்டு மக்களில் ஆப்பிரிக்க கணிசமான பகுதியினர் நாடோடி வாழ்க்கை நட த்துகின்றனர். நாட்டு மக்களில் பெரும்பான்மை யினர் இஸ்லாமிய சமயத்தைச் சார்ந்தவர்கள். மக்களிடையேயான ஒற்றுமைக் குறைவின் காரணமாக ஆப்கானிஸ்தானம் விரைந்து முன் னேற இயலவில்லை. இந்நாட்டின் அரசு மொழி புஷ்து மொழியாகும். இங்குள்ள விவசாயிகள் கோதுமை, பார்லி, நெல், கரும்பு முதலான உண வுப் பொருள்களையும் புகையிலை போன்ற பணப் பயிர்களையும் பயிர் செய்கின்றனர். மலைகள் சூழ்ந்த பகுதிகளாதலால் அதிக அளவில் பழங்கள் விளைகின்றன. ஆடு மேய்ப்பது மற்றொரு முக்கியத் தொழிலாகும். ஜமுக்காளம், ஆட்டுத் தோல், கம்பளம், பழங்கள் பெருமள வில் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. ஆப்பிரிக்கா உலகிலுள்ள ஐந்து கண்டங்களுள் இரண்டாவது பெரிய கண்டம் ஆப்பிரிக்காவாகும்.இருண்ட கண்டம் என்று அழைக்கப்பட்ட இக் கண்டத்தைப் பற்றி பத்தொன்பதாம் நூற்றாண்டிற்குப் பின்னரே அனை வருக்கும் தெரிய வந்தது. இது இந் தியாவிற்குத் தென்மேற்கே அமைந் துள்ளது. வடக்கே மத்திய தரைக்கடலும் கிழக்கிலும் தெற்கிலும் இந்து மாக்கட லும் மேற்கே அட்லாண்டிக் மாகட லும் எல்லைகளாக அமைந்துள்ளன. ஆப்பிரிக்காவின் மொத்தப் பரப் பளவு ஒரு கோடி பதினேழு இலட்சம் சதுர மைல்களாகும். இதுவரை 52நாடுகள் விடுதலை பெற்றுள்ளன. இந்த நாடுகளுள் மிகப் பெரியது சூடான் நாடு. மிகச் சிறியது. சிசில்ஸ்