பக்கம்:சிறுவர் கலைக் களஞ்சியம்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவ்வாறே உருது, ● மொழிகளில் இஸ்லாமிய மருத்துவ முறையான யுனானி அமைந்துள ளது. ஆர்க்டிக் பெருங்கடல் இது உல கில் உள்ள பெருங்கடளுள் அளவில் மிகச் சிறியது. பூமியின் வட துருவக் தில் அமைந்துள்ளது. இதன் மொத் தப் பரப்பளவு 94,85,100 ச.கி.மீ. ஆகும். இப்பெருங்கடலின் பெரும் பகுதிகள் பனியால் மூடப்பட்டுள் 6ts 60s, எனும் கிரேக்கர் கி.பி.300 இல் ஆர்க் டிக் பெருங் கடல் வரை கப்பலில் சென்று வந்தார். அதன்பின் கி. பி. 1900ஆம் ஆண்டுவரை ஒரு சிலரே சென்று வந்தனர். இன்று அப்பகுதி வாணிக, இராணுவச் சிறப்புக்குரிய பகுதியாகக் கருதப்படுகிறது. இப்பகுதி ஆர்க்டிக் வட்டம் என் றும் அழைக்கப்படும். இங்கு பல நாட் கள் சூரியன் மறைவதில்லை. அதே போன்று பல நாட்கள் இருள் கவிந் திருக்கும். ஆர்க்டிக்கின் சில பகுதிகளில் கோடையில் பனி உருகும். அப்போது சிறுவகைப் புற்களும் பாசான்களும் காணப்படும். இப்பகுதி துந்திரப்பிர தேசம் என அழைக்கப்படும். இப் பகுதிகளில் எஸ்கிமோக்களும் லாப் லாந்திய இன மக்களும் குறைந்த எண்ணிக்கையில் வாழ்கின்றனர். இவர்கள் மீன் பிடித்தும் கலைமான் கள், சீல், வால்ரஸ் போன்றவை களை வேட்டையாடியும் வாழ்கின்ற னர். இவர்கள் பனிகட்டிகளைக் கொண்டே வீடு அமைத்துக் கொள் கின்றனர். அவ்வீடுகள் இக்லு என அழைக்கப்படுகிறது. இங்கு தாதுப் பொருள்களும் இருப் பதாக அண்மைக் காலத்தில் கண் அரபி, பர்சிய டறிந்துள்ளார்கள். முதன் முதலாகப் பிதியஸ் , ஆர்வில் ரைட் ; இங்கு ஆய்வுக் கூடம் அமைத்து தொடர் ந் து ஆராய்ச்சி செய்துவருகிறார்கள். ஆர்வில் ரைட், வில்பர் ரைட் இன்று நாம்காணும் விமானங்களுக்கான அடிப்படைகளைக் கண்டறிந்தவர் கள், ஆர்வில் ரைட்டும் அவர் சகோ தரர் வில்பர் ரைட்டும் ஆவர். அவர் களை ரைட் சகோதரர்கள் என்றே வழங்குவர். - இவர்களுக்கு முன்பு இருந்தவர்கள் காற்றைவிட கனம் குறைந்த வாயுக் கள் நிரம்பிய பலூன்கள் மூலம் பயணம் செய்யும் வழிகளையே அறிந் திருந்தார்கள். தரையிலிருந்து கிளம்பி ம்ேலேறுவதே அவர்களின் ஆய்வாக இருந்தது. அதில் ஓரளவு வெற்றியும் கிடைத்திருந்தது. ஆனால் மே லெழுந்த விமானத்தை விரும்பியபடி இயக்கிச் செலுத்த அறிந்திருக்க வில்லை. அதற்கான புதிய இயந்திர நுட்பத்தைக் கண்டறிந்த பெருமை ஆர்வில் ரைட்டுக்கும் அவர்சகோதரர் வில்பர் ரைட்டுக்குமே போய்ச்சேரும். சகோதரர்கள் இருவரும் உயர் நிலைப்பள்ளிக் கல்வியை கற்றனர். | இளம் வயது முதலே இருவரும் இயந் திர ஈடுபாடு உள்ளவர்களாக இருந் தனர். எனவே, இருவரும் இணைந்து சைக்கிள் கடை வைத்து நடத்தினர். சைக்கிள்களைப் பழுது பார்ப்பதோடு புதிய சைக்கிள்களை தயாரித்தும் வந் தனர். அவைகளை விற்றதன் மூலம் நல்ல வருமானமும் பெற்றனர். அக்காலத்தில் வானத்தில் பறப்பது தொடர்பாகப்பல்வேறு ஆராய்ச்சிகள் நடந்து வந்தன. ஒட்டோ லிலியந் தால், அக்டேங் கன்யூட், சாமுவேல் பி. லாங்லி போன்றவர்கள் வானத் தில் பறப்பதைப்பற்றி பல்வேறு ஆராய்ச்சிகளை செய்து வந்தனர்.