பக்கம்:சிறுவர் கலைக் களஞ்சியம்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

55 வகையான ஆற்றலைப் பயன்படுத்தி யே வாழ்கிறோம். நாம் பயன்படுத்தும் ஆற்றலைப்பொருத்தே நம் பொருளா தார வசதிகளும் வாழ்க்கை வளமும் மிகுகிறது. நாமும் உலக உயிரினங்களும் பெருமளவிலான ஆற்றலை கதிரவனி டமிருந்தே பெற முடிகிறது.நாம் வெப் பம் தரும் ஆற்றலைப் பெறுகிறோம். அதுபோன்றே சூரிய ஒளியின் உதவி யினால் தாவரங்கள் ஒளிச்சேர்க்கை' மூலம் ஆற்றலைத் தேக்கி வைத்து நமக்கு அளிக்கின்றன. விறகை எரிக் கும்போது இவ்வாற்றலே வெப்பமாக வெளிப்பட்டுப் பயன்படுகின்றது. சூரிய ஆற்றலைத் தேக்கி வைத்த மரஞ்செடி கொடித் தாவரங்களே முன் னாளில் பூமிக்கடியில் புதையுண்டு, பின்னர் நிலக்கரியாகவும் இயற்கை வாயுவாகவும், பெட்ரோலியம் உள் பட பல வகைகளாக வெளிப்பட்டு வெப்பம் தந்து உதவுகின்றன. நிலத் தடி வெப்பம், காற்றால் பெறும் ஆ ற் ற ல், கடல் அலைகளிலிருந்து கிடைக்கும் ஆற்றல் ஆகிய அனைத் திற்கும் ஆதாரம் சூரிய வெப்பமே யாகும். கதிரவன் தரும் ஆற்றலுக்குத் தகுந்த நிலையில் பேராற்றல் தரும் ஆதார மூலமாக அணு அமைந்தி ருக்கிறது. புனல்மின், அனல்மின் ஆகியவற்றை விட அபரிமிதமாகக் கிடைப்பது அணுமின் ஆகும். மின் ஆற்றல் இன்றைய வாழ்வின் அனைத்து அம்சங்களுக்கும் இன்றி யமையாத ஒன்றாக அமைந்துள்ளது. கம்பி வழி எளிதாக எங்கும் எடுத்துச் செல்லக் கூடியது. மின் விளக்கு, மின் விசிறி, குளிர் ப த ன ப் பெட்டி, தொலைக்காட்சி, வானொலி, பளு தாக்கிக்கருவி கள்,மின்தொடர்வண்டி, ஆறுகள் மாவரைக்கும் எந்திரம், நீர் இறைக் கும் எந்திரம் என எத்தனையெத் தனையோ வகைகளில் பயன்பட்டு வருகின்றது. இவ்வாறு வெப்ப ஆற்றல், ஒளி யாற்றல், ஒலியாற்றல், மின்னாற்றல், பொருளாற்றல் எனப் பல்வேறு வடி வில் ஆற்றல் அமைந்து நமக்கு உதவி வருகின்றன. ஆறுகள் பெய்யும் மழையினாலும் உருகும் பணியினாலும் ஆறுகள் உரு வாகின்றன. ஊற்று நீரால் உரு வாகும் ஆறுகளும் உண்டு. சிறு ஓடைகள் ஒன்றாக இணைந்து ஆறு களாக உருமாறி ஓடுவதும் உண்டு. ஆறுகள் பெரும்பாலும் மலைப்பகுதி களிலேயே உருவாகி ஓடுகின்றன. சில ஆறுகளில் ஆண்டு முழுவதும் நீர் ஒடும். இவை 'ஜீவ நதிகள்’ என அழைக்கப்படுகின்றன. சில ஆறுகள் குறிப்பிட்ட காலங்களில் மட்டும் நீர்ப் பெருக்குடன் ஒடும். சிற்றாறுகள் பெரிய ஆறுகளுடன் கலப்பதும் உண்டு. பெரிய ஆறுகள் சிற்றாறுகளாகப் பிரிந்து சென்று பாய் வதும் உண்டு. நீர்ப்பாசனத்திற்கும் போக்குவரத் துக்கும் நீர்மின் உற்பத்திக்கும் இன்றி யமையாததாக ஆறுகள் விளங்கு கின்றன.இவை நாட்டின் மிகச்சிறந்த செல்வ வளமாகக் கருதப்படுகின்றன. எப்பகுதியிலிருந்து ஆற்று நீர் வடிந்து வருகிறதோ அப்பகுதி வடிநிலம் என அழைக்கப்படும். பள்ளத்தை நோக்கி விரைந்து ஓடிவரும் நீர், நில அரிப்பை ஏற்படுத்துவதும் உண்டு. அவை நாளடைவில் பெரிதாகும் போதே அது பள்ளத்தாக்கு ஆகிறது. உலகிலேயே மிக நீளமான ஆறு நைல் ஆறு ஆகும். இது எத்தி