பக்கம்:சிறுவர் கலைக் களஞ்சியம்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இத்தாலி கும். இடிதாங்கிக் கம்பிக்கு அருகாக மேகங்களுக்கிடையே மின்னல் உண் டாவதால் ஏற்படும் மின்சாரம் இடி தாங்கிக் கம்பி மூலம் பாய்ந்து தரைக் குள் சென்றுவிடும். இதனால், கட்டி டத்திற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படுவ தில்லை. இச்செப்புப் பட்டையை 2.6 செ. மீ. அகலமும், 2 செ.மீ. தடிப்பும் உள்ளனவாக அமைத்தல் வேண்டும். இந்த மின்னலில் தகடு மின்னல், நாடா மின்னல், பாசி மின்னல், வெப்ப மின்னல், அலை மின்னல், பந்து மின்னல் எனப் பலவகைகள் உண்டு. மின்னலால் சில நன்மைகளும் உண்டு. மின்னல் காற்றினூடே பாயும்போது அயனியாக்கப்பட்ட காற்றினால் நைட்ரஜன் ஆக்சைடும் ஓஸோன் என்னும் ஒருவகை ஆக்சி ஜனும் உற்பத்தியாகின்றன. நைட்ர ஜன் ஆக்சைடு தாவரங்கள் செழித்து வளர உரமாகப் பயன்படுகின்றன. இடிதாங்கியை கண்டுபிடித்தவர் பெஞ்சமின் ஃபிராங்க்ளின் ஆவார். இத்தாலி, ஐ ரோப்பா வை ச் சேர்ந்த இத்தாலி பழம்பெருமை வாய்ந்த நாடாகும். இது மூன்றுபுறம் சூழப்பட்ட ஒரு தீபகற்பமாகும். இதன் மொத்தப் பரப்பு 8, 1,225 கி.மீ.களா கும் மக்கள் தொகை 5,62,80,000 (1988) ஆகும். வடக்கே சுவிட்சர் லாந்தும் கிழக்கே ஏட்ரியாடிக் கடலும் தெற்கே மத்திய தரைக் கடலும் மேற்கே டிரீனியன் கடலும் எல்லை களாக உள்ளன. இந்நாட்டின் மத்தி யில் அப்பினைன் மலைத் தொடர் உள்ளன. அவை வட எல்லைகளாக உள்ளன. வட எல்லையில் ஆல்ப்ஸ் மலைத்தொடர் இருக்கிறது. தெற்கே யுள்ள சிசிலித் தீவில் எட்னா’ எனும் எரி மலை உள்ளது. மேற்குக் கரை 67 யோரமாக உள்ள நேப்பிள்ஸ் எனும் துறைமுக நகரைஅடுத்து எப்போதும் புகைந்து கொண்டே இருக்கும் வெசு வியல் எரிமலை இருக்கிறது. இந்த எரிமலை கி. பி. 79இல் வெடித்து பாம்ப்பி எனும் நகரத்தையே அழித்து விட்டது. இத்தாலி இத்தாலியிலுள்ள மிகப் பெரிய ஆறு பேர்’ என்பதாகும். டைபர் எனும் ஆற்றின் கரையில் இத்தாலியின் தலைநகரான ரோம் அமைந்துள்ளது. இத்தாலி நாட்டில் வனப்புமிகு ஏரிகள் பலவுண்டு. நேப்பிள்ஸ், ஜெனோவா, பிரிண்டிசி, வெனிஸ் முதலிய துறைமுக நகரங்கள் உள்ளன. கப்பல் போக்குவரத்துக்கு உதவுகின்றன. வெனிஸ் மிக அழகான கடற்கழி களைக் கொண்ட நகரமாகும். பேர் ஆற்றுச் சமவெளியில்தான் நகரங்கள் பலவும் அமைந்துள்ளன. அங்கு மக்கள் நெருக்கமும் அதிகம். வேளாண்மைத் தொழில் செழிப்பாக நடைபெறுகின்றன. கோதுமை, பார்லி, ஒட்ஸ் முதலி யன விளைகின்றன. திராட்சை பழத் தோட்டங்கள் மிகுதி. ஒலிவ மரங்களும் அதிகமாக உள்ளன. சர்க் கரைத் தொழில், நெசவுத் தொழில் சிறப்பாக நடைபெறுகின்றன. சல