பக்கம்:சிறுவர் கலைக் களஞ்சியம்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 பேசப்படும் தகுதியுமுடைய மொழி களாக 15 இந்திய மொழிகள் உள்ளன. அவை. மட்டும் அர சியல் அமைப்பு ஏற்றுக்கொண்ட மொழிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. இவைகளாவன: அஸ்ஸாமி, இந்தி, உருது, ஒரியா, கன்னடம், காஷ்மீரி, சமஸ்கிருதம், சிந்தி, தமிழ், தெலுங்கு, பஞ்சாபி, மராத்தி, மலையாளம், வங்காளம் ஆகிய மொழிகளாகும். இவை ஆரிய, திராவிட மொழிக் குடும்பத்தைச் சார்ந்தவைகளாகும். மற்ற மொழிகள் ஆரிய குடும்பத்தைச் சார்ந்தவைகளாகும்.இவற்றுள் இரண் டாயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழமையுடைய மொழிகள் தமிழும் சமஸ்கிருதமும் ஆகும். இதில் சமஸ் கிருதம் எழுத்து வழக்கில் மட்டுமே உள்ளது; பேச்சு வழக்கில் இல்லை. சிறு சிறு மக்கள் குழுமத்தால் பேச்சு மொழியாக மட்டும் பயன்படுத் தப்படும் மொழிகள் 200-க்கு மேல் இந்தியாவில் உள்ளன. இவை திரா விட இந்தோ-ஆரிய மொழிக் குடும் பங்களைச் சார்ந்த கிளை மொழிகளா கும். இந்திய விடுதலைப் போராட்டம்: இந்திய நாடு 1947 ஆகஸ்ட் 15 அன்று விடுதலை பெற்றது. இரு நூறு ஆண்டுகளுக்கு மேலாக இந்தி விாவை ஆண்டுவந்த ஆங்கிலேயர் களிடமிருந்து அண்ணல் காந்தியடி கள் தலைமையில் போராடி இவ்விடு தலையை இந்திய மக்கள் பெற்றனர். சுமார் 300 ஆண்டுகட்கு முன்பு வணிகத்திற்கென இந்தியா வந்தனர் ஆங்கிலேய வியாபாரிகள். அப்போது இந்தியாவை ஆங்காங்கே இருந்த மன்னர்கள் ஆட்சி செய்து கொண்டி ருந்தனர். அவர்களுக்கிடையே ஒற் றுமை இல்லாத தன்மையையும் ஒரு இந்திய விடுதலைப் போராட்டம் வரோடு ஒருவர் போரிட்டு வரும் போக்கையும் ஆங்கில வணிகர்கள் கண்டனர். அதைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு சூழ்ச்சி செய்து படிப்படியாக நாடு முழுவதை யும் வசப் படுத்திக் கொண்டனர். ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்தை எதிர்த்து இந்தியர்களின் உரிமையை நிலைநாட்ட இந்திய தேசீயக் காங்கி ரஸ் எனும் அமைப்பு 1885இல் அமைக்கப்பட்டது. இந்த அமைப்பு மக்களிடையே உரிமை வேட்கை யைக் கிளர்ந்தெழச் செய்தது. மக்கள் உரிமைபெற வேண்டி போராட முனைந்தனர். இதனையறிந்த ஆங் கில ஆட்சி மக்களிடையே பிரித்தா லும் சூழ்ச்சியை மேற்கொண்டு மக் களை ஒன்றுபட்டு போராட விடாமல் தடுக்க பல்வேறு முயற்சிகளை மேற் கொண்டது. அதன் விளைவாக முஸ்லிம் லீக் எனும் அமைப்பைத் தோற்றுவித்து இந்துக்களுக்கு எதிர கவும் ஆங்கிலேயருக்கு ஆதரவாகவும். பிரச்சாரம் நடக்க ஏற்பாடு செய்தது. இந்த நிலையில் முஸ்லிம் நாடாகிய துருக்கி மீது பிரிட்டன் படையெடுக்க முற்பட்டபோது அதனை இந்திய முஸ்லிம்கள் எதிர்த்தனர். அவர்கள் இந்திய மக்களோடு இணைந்து நின்று ஆங்கில ஆட்சியை எதிர்க்க முன்வந்தனர். அதன் விளைவாக 1916இல் காங்கிரசும் முஸ்லிம் லீகும் ஒன்றாக இணைந்து ஆங்கில ஆட்சி யை எதிர்த்தன. இந்தச் சமயத்தில் தென்னாப்பிரிக் காவில் வெள்ளையராட்சியை எதிர்த் துப் போராடிய அண்ணல் காந்தியடி கள் இந்தியா திரும்பினார். அவர் இந்திய மக்களின் மனநிலை அறிந்து அவர்களின் உரிமைக்காகப் போராட லாயினார். அவரது வருகையால் சுதந்திரப் போராட்டத்தில் பல புதிய போக்கு