பக்கம்:சிறுவர் கலைக் களஞ்சியம்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§0 இமயமலைப் பகுதியில் அழகான காஷ்மீர் பள்ளத்தாக்க அமைந்துள் ளது. சிம்லா, டார்ஜிலிங் போன்ற மலை வாசத் தலங்களும் இங்குள் ளன. கோடை காலத்தில் இவ்விடங் களுக்கு ஏராளமான உல்லாசப் பயணிகள் வந்து செல்கின்றனர். இமயமலையில் கங்கை, சிந்து, பிரம்ம புத்திரா போன்ற இருபதுக்கு மேற் பட்ட நதிகள் உற்பத்தியாகின்றன. தேவதாரு போன்ற மரங்களும் தேயி லையும் அதிக அளவில் விளைகின் றன. இமாசலப் பிரதேசம்: இந்திய மாநி லங்களுள் ஒன்றான இது இமய மலைச் சரிவில் அமைந்துள்ளது. உத்திரப் பிரதேசம், ஹரியானா, பஞ் சாப், ஜம்மு-காஷ்மீர் மாநிலங்களுக்கு இடைழ்ே இம்மாநிலம் அடங்கியுள் ளது. இம்மாநிலத்தின் பரப்பளவு 27, 300 ச. கி. மீ. மக்கள் தொகை 42,37, 569 ஆகும். ஜம்மு- காஷ்மீரம்

  • أ. مس، ஹரியானா "م

_ இமாசலப் பிரதேசம் இமயமலைப் பகுதியாதலால் இங்கு ஆப்பிள், பீச், வாதுமை போன்ற பழ வகைகள் மிகுதியாகப் பயிராகின்றன. மற்றும் இஞ்சி. தக்காளி, உருளைக் இயற்கை வாயு கிழங்கு, பட்டாணி போன்ற காய்கறி வகைகளும் அதிகம் விளைகின்றன. மலைப் பகுதியாதலால் மரங்கள் மிகு தியாக வெட்டப்படுகின்றன. கம்பளி ஆடை நெய்தல் முக்கியத் தொழிலா கும்.யமுனை, சட்லெஜ், ராவி,சினாப், பியாஸ் ஆகிய ஐந்து ஆறுகளும் இம் மாநிலத்தின் வழியாக ஒடுகின்றன. சிம்லா இதன் தலைநகராகும். இயற்கை வாயு நமக்கு வேண்டிய பல அத்தியாவசியப் பொருட்கள் அடி யில் புதைந்துள்ளன. அவற்றுள் நிலக்கரி, பெட்ரோல், இயற்கை எரி வாயு ஆகியவை மிக முக்கியமானவை களாகும். பூமிக்கு அடியிலிருந்து நிலக்கரி, பெட்ரோல் எடுக்குபோது ஒருவகை வாயு வெளிப்படும். இதுவே இயற்கை வாயு ஆகும். பெரும்பாலும் பெட் ரோல் கிடைக்குமிடத்தில் இவ்வாயு வெளிப்படும். சில சமயங்களில் இவ் வாயு பூமிக்கடியில் இருந்து தானாக வெளிப்படுவதும் உண்டு. இது பல வகையான வாயுக்களும் கொண்ட கூட்டுக்கலவையாகும். இது மிகச்சிறந்த எரிபொருளாக இன்று பயன்படுகிறது. பூமிக்கு அடி யில் இயற்கை வாயு கிடைக்குமிடத் தைக் கண்டறிந்து அங்கிருந்து குழாய் மூலம் தொழிற்சாலைகளுக்குக் கொண்டு சென்று பயன்படுத்துகின் றார்கள். இதைக் கொண்டு பெரிய கொதிகலன்கள் வெப்பமூட்டப்படு கின்றன. இயற்கை எரி வாயுவிலி ருந்து மின்சாரமும் எடுக்கப்படுகின் றது. தொழிற்சாலைகளில் எரிபொரு ளாகப் பயன்படுத்தப்படுகிறது. அதே போன்று வீட்டிலும் சமையல் அடுப்பு களில் எரிவாயுவாகப் பயன்படுத்தப் படுகிறது.