பக்கம்:சிறுவர் கலைக் களஞ்சியம்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயேக கிருஸ்து இவ்வாயுவிலிருந்து பல்வேறு வகை யான இரசாயனப் பொருட்கள் உரு வாக்கப்படுகின்றன. இவ்வகையில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பொருட்கள் உருவாக்கப்படுகின்றன. இயற்கை எரிவாயு அமெரிக்கா, கனடா, மத்திய கிழக்கு நாடுகள், ஜப் பான், சீனா, ரஷ்யா, இந்தியா, ருமே னியா ஆகிய நாடுகளில் அதிக அளவு கிடைக்கின்றது. இயற்கை எரிவாயு எளிதான, சிக்கனமான எரி பொருளா GUp• இயேசு கிருஸ்து உலகிலுள்ள சமயங்களுள் மிகப் பெரியது கிருஸ் துவ சமயமாகும். இதைத் தோற்று வித்தவர் இயேசு கிருஸ்து ஆவார். புத்தர் பெயரால் புத்தமதம் இருப்பது போன்று இவர் பெயரால் கிருஸ்துவ சமயம் அமைந்துள்ளது. .ெ த ன் மே ற் கு ஆசியப்பகுதியில் பாலஸ்தீனம் என்ற ஒரு நாடு உண்டு. அங்கு பெத்லேகம் எனும் சிற்றுாரில் இயேசு கிருஸ்து பிறந்தார். தச்சரான இவர் தந்தையின் பெயர் ஜோசப். தாயார் க ன் னி மே ரி ஆவார்: - இயேசு கிருஸ்து இளமையில் தன் தந்தையோடு தச்சுத் தொழில் செய்து வந்தார். அன்பின் வழிப்பட்ட மக்க ளுக்கு நல்வழி காட்டி அவர்களை மீட்க இறைவனால் தான் அனுப்பப் பட்டிருப்பதாக உணர்ந்தார். மக்க ளுக்கு உபதேசம் செய்யலானார். இதற்காக இயேசு கிருஸ்து எங்கெல் கெல்லாம் மக்கள் வாழ்கிறார்களோ அங்கெல்லாம் சென்று போதனை செ ய் தா ர். 'மற்றவர்களிடத்தில் அன்பும் பரிவும் காட்ட வேண்டும். தாங்கள் செய்யும் பாவங்களை உணர்ந்து திருந்த வேண்டும். இறை வனிடம் மன்னிப்புக் கேட்க வேண் 81. டும். பிறர் செய்யும் தவறுகளை மன் னிக்க வேண்டும். மன்னிக்கும் மனப் பான்மை கொண்டவனே சிறந்த மனிதன் ஆவான்.' என்பதே இவரது சிறந்த போதனைகள் ஆகும். சிறு சிறு கதைகள் மூலம் இவரது போத னைகள் மக்களை ஈர்த்தன. இவரது சொற்பொழிவைக் கேட்டவர்கள் இவர் வழியில் ஒழுகத் தலைப்பட்ட னர். இயேசு கிறிஸ்துவின் போதனை கள் யூத சமயத்திற்கு எதிராக இருப்ப தாக யூத சமயத் தலைவர்கள் கருதி சிலுவையில ஏசுநாதர் எதிர்த்தார்கள். இவர்மீது பல்வேறு விதமான குற்றங்களைச் சுமத்திமரண தண்டனை விதித்தார்கள். தண் டனை நிறைவேற்றத்துக்காக ரோமா னியர்களிடம் ஒப்படைத்தனர். அவர் கள் இவரைச் சிலுவையில் அறைந்து கொன்று விட்டனர். மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்த இயேசு கிறுஸ்து நாற்பது நாட்கள் இவ்வுலகில் தங்கி தம் சீடர்களுக்கு உபதேசம் செய்த பின் மேலுலகம் சென்றதாகக் கூறப் படுகிறது. இவரது சீடர்கள் உலகெங்