பக்கம்:சிறுவர் கலைக் களஞ்சியம்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுவர் கலைக்களஞ்சியம்

அ: தமிழ் எழுத்துகளில் முதல் எழுத்து. ‘அ’ கரத்தை முதலாகக் கொண்டே மற்ற எழுத்துக்கள் இயங்குகின்றன. எழுத்துகளுக்கு ‘அ’ முதலாவது எழுத்தாக இருப்பது போன்று உலகத்துக்கு இறைவன் முதல்வனாக உள்ளான் என்பது வள்ளுவர் வாக்கு.

அக்கி: இது நம் தோலின் மீது உண்டாகும் நோயாகும். இது ஒரு வித வைரஸ் எனப்படும் நச்சு நுண்மத்தால் உண்டாகும் நோய். இது சிவப்புநிறக் கொப்புளங்களாக உண்டாகும். இக் கொப்புளங்களில் எரிச்ச லும் நமைச்சலும் ஏற்படும்.அப்போது சொரியக் கூடாது. சொரிந்தால் புண் ணாக மாறி வேதனை தரும். அம்மை நோயைப் போல் இது சில நாட்கள் இருந்துவிட்டுத் தானாக மறைந்து விடும். நைட்ரஸ் ஈதர்' எனும் பொருளை இதன் மீது தடவினால் மேலும் வராமல் தடுக்கலாம். இந் நோய் பெரும்பாலும் கோடை காலத் தில் வரும். அக்டோபர் புரட்சி: ரஷ்யத் தலை நகர் பெட்ரோகிராடில் (அதன் இன் றையப் பெயர் லெனின்கிராட்) 1917ஆம் ஆண்டு நடந்த புரட்சி. இது அக்டோபர் மாதத்தில் நடை பெற்றதால் அக்டோபர் புரட்சி' என அழைக்கப்படுகிறது. ஜார் மன்னர் களின் கொடுங்கோலாட்சியை எதிர்த்து அந்நாட்டுப் பொதுவுடை மைக் கொள்கையினர் புரட்சி செய்த னர். அவ்வாண்டு மார்ச் மாதம் தொடங்கிய இப்புரட்சி அக்டோபர் 25இல் மக்களின் மாபெரும் வெற்றி யாக முடிந்தது. திறமையில்லாத, பிற் போக்குத்தனமான ஆட்சியினர்.அகற் றப்பட்டனர். பொதுவுடைமைத் தலைவர்களான லெனின், டிராட்ஸ்கி போன்றவர்கள் ஆட்சியைக் கைப் பற்றிப் பொதுவுடைமை ஆட்சியை அமைத்தனர். ஃபிரெஞ்சுப் புரட்சி யைப்போல் ரஷ்யாவின் அக்டோபர் புரட்சியும் உலகப் புகழ்பெற்றதாகும். அக்பர் இந்தியாவை ஆண்டமுஸ் லிம் மன்னர்களில் மிகவும் புகழ்