பக்கம்:சிறுவர் கலைக் களஞ்சியம்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 இவற்றின் மூலம் பிராணவாயுவும் உணவுச் சத்துகளும் உடலெங்கும் கொண்டு செல்லப்படுகின்றன. அவ வாறே கழிவுப்பொருள்களோடுகூடிய தூய்மையற்ற இரத்தம் இதயத்திற் _நுரையீரல் இரத்த நாளங்கள் :ே சிரை பெருந் தமனி ஈரல் இரைப்பை குடல் சிறு நீரகங்கள் உடலின் கீழ்ப்பாகம் மனித உடலில் இரத்தவோட்டம் குச் சிரைகள் மூலம் கொண்டு செல் லப்படுகின்றன, இஃது நுரையீரலால் சுத்திகரிக்கப்பட்டு மீண்டும் உட லெங்கும் பாய்கின்றன. தமனிகள் சற்று உறுதியானவை. மணிக்கட்டு, .ெ ந ற் றி ப் பொட்டு போன்ற இடங்களில் மேல் தோலின் அருகிலேயேசெல்கின்றன.மற்ற இடங் களில் உடலின் உட்புறமாகவே செல்கின்றன. எனவேதான் நாடித் துடிப்பை அறிய மணிக்கட்டு அருகில் தொட்டுப் பார்க்கிறார்கள். இதயத் துடிப்பு வீதத்தை நாடித் துடிப்பு மூலம் அறிய முடியும். சிரைகளின் சுவர்கள் மெல்லியதாக இருக்கும். தமனிகளில் போல் இரத் தம் விட்டுவிட்டுப் பாயாது. சிரை களில் இரத்த ஓட்டம் ஒரே சீராக இருக்கும். சிரைகள் மூலம் இதயத்தை இராசராச சோழன் நோக்கிப் பாயும் இரத்தம் பின்நோக்கி இறங்காமல் தடுக்க சிரைகளில் வால் வுத் தடைகள் உண்டு. 555áಹಂಗಿರ್ಪ ಹ೧fಹಣಿ! மிக மெல்லி யவை, மென்மையானவை. இராசராச சோழன்: தமிழ் மன் னர்களில் கரிகால் சோழனுக்குப் பின் னர் பெரும்புகழோடு விளங்கியவர் இராசராச சோழன் ஆவார். இவர் சோழ நாட்டை கி. பி. 985 முதல் 1014 ஆம் ஆண்டுவரை சீரும் சிறப்பு மாக ஆண்டார். இவர் அரியணை ஏறியபோது இவ ரது ஆட்சிப் பகுதியான சோழநாடு சிறியதாக இருந்தது. இவர் தமது திற மையாலும் வீரத்தாலும் பாண்டிய ம ன் ன ரை யு ம் சேரமன்னரையும் வெற்றி கொண்டார். கர்நாடகத்தை யும் மேலைச் சாளுக்கிய நாட்டையும் வென்றார்.இதன்மூலம் இவரது சோழ நாடு மிகப் பெரும் நிலப்பகுதியாக விளங்கியது. இவர் உருவாக்கிய மிகப்பெரும் கப்பற்படையின் துணை கொண்டு இலங்கையின் வடபகுதியை யும் கடாரத்தையும்,சுமித்திரா, ஜாவா, மாலத்தீவுகளையும் வென்றார். இத னால் இவரது ஆதிக்கம் கடல்கடந் தும் சென்றது. இவர் தம் ஆட்சிக் காலத்தின் பெரும் பகுதியைப் போரி லேயே கழிக்கும்படியாயிற்று. மாபெரும் சோழப் பேரரசை உரு வாக்கியதோடு அதனைச் சிறப்பாக ஆட்சிசெய்த பெருமையும் அவருக்கு உண்டு. இவர் காலத்தில் நிலங்களை முறையாக அளந்து வரிவிதிக்கும் முறை மேற்கொள்ளப்பட்டது. நாடு மண்டலங்களாகவும், மண்டலங்கள் வளநாடுகளாகவும் பி ரி க் கப் பட் டு ஆட்சிமுறை சீராக்கப்பட்டது. முடி யாட்சியே யாயினும் கு ட வோ லை