பக்கம்:சிற்றம்பலம்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிற்றம்பலம் 3

"கில்ல்ே மூதூர் ஆடிய கிருவடி

பல்லுயிர் எல்லாம் பயின்றன. கிை" என்பது அவர் பாட்டு. சேக்கிழார் பெருமான் அம்பலத் தாடுவானேப் பலபடியாகப் பாராட்டுவார். தேவாரம் மீண்டும் உலகத்தாருக்குக் கிடைத்த இடம் தில்லையே. தேவாரம் பாடுவார் எந்தத் தலத்தின் பதிகத்தைப் பாடினுலும் திருச்சிற்றம்பலம் என்று சொல்லித் தொடங்குவதும், திருச்சிற்றம்பலம்’ என்று சொல்லி முடிப்பதும் வழக்கம்.

சுந்தரமூர்த்தி நாயனர் திருவாரூரில் திருத்தொண்டத் தொகை பாடத் தொடங்கினர். பல ஊர்களில் இருந்த நாயன்மார்களைப்பற்றிப் பாடத் தொடங்கியபொழுது, இறைவன் திருவருளால்முதற்பகுதி வானெலியாக வந்தது.

'கில்ல்ேவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்” என்ற முதல் அடியின் முதற்பகுதியே அது. தில்லையை முதலில் கினேக்கச் செய்த திருவருள் அதன் வாயிலாக அத் தலத்தின் தலைமையையும் எடுத்துக் காட்டிய தென்றே கொள்ளவேண்டும். . . .

சிதம்பரத்திற்குரிய பழம்பெயர் பெரும்பற்றப் புலியூர் என்பது. புலியூர் என்பது அதன் இயற்பெயர். அது உள்ள பகுதி பெரும்பற்று. பல புலியூர் இருத்தலினல் இதனைச் சுட்டிக்காட்டப் பெரும்பற்றப் புலியூர் என்று சொல்லும் வழக்கம் ஏற்பட்டது. தில்லை என்னும் மரம் இத்தலத்தில் சிறப்புடையதாதலால் இதற்குத் தில்லை வனம், தில்லை என்ற பெயர்கள் அமைந்தன. மதுரைக்குக் கடம்பவனம் என்று தலத்துக்குரிய கன்மரத்தால் பெயர் அமைந்தது போன்றது. இது. -

இங்கே இறைவன் ஆடும் இடம் சிற்றம்பலம். சிவ லிங்கப் பெகுமான் எழுந்தருளிய இடம் திருமுலட்டானம். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிற்றம்பலம்.pdf/13&oldid=563156" இலிருந்து மீள்விக்கப்பட்டது