பக்கம்:சிற்றம்பலம்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

连 சிற்றம்பலம்

நடராசப பெருமானுடைய சந்நிதியே சிறப்புடையதாத லால் அதனைத் தில்லைச் சிற்றம்பலம் என்று வழங்குவர். திருக்கோயில் முழுவதுக்குமே சிற்றம்பலம் என்ற பெயர் பிறகு அமைந்தது. -

பேரம்பலம் என்ற பகுதி ஒன்றும் திருக்கோயிலில் இருப்பதால் இறைவன் ஆடும் இடத்தைச் சிற்றம்பலம் என்று வழங்கினர். . . . . .

"சிற்றம் பலமும் கிருப்பெரும்போம்பலமும்

மற்றும் பலபல மண்டபமும்’ ’

என்று ஒட்டக்கூத்தர் இந்த இரண்டு அம்பலங்களையும் வைத்துப் பாடுகின்ருர். - . . .

நாளடைவில் சிற்றம்பலம் சித்தம்பலமாகிப் பின்பு சிதம்பரம் ஆயிற்றென்று தோன்றுகிறது. சித்தாகிய அம்பரம், சிதாகாசம்' என்று பொருள் விரித்தார்கள். இறைவன் ஞானவெளியில் கடனம் புரிகின்ருன் என்ற அற்புதமான உண்மையை கினேப்பூட்டும் வகையில் சிற்றம்பலம் என்ற பெயர் சிதம்பரம் என்று மாறியது, பின்னும் சிறப்பான பொருளைத் தருவதனால் சிதம்பரம் என்ற பெயரே உலக வழக்கில் இப்போது மிகுதியாக வழங்கலாயிற்று. ஆயினும் இலக்கியங்களிலும் சாசனங் களிலும்iசிற்றம்பலம் என்ற பெயரே ஆட்சிபெறுகின்றது.

தில்லைவாழந்தணர்கள் அக் காலத்தில் மூவாயிரவர் இருந்தனர். இறைவனே அம் மூவாயிரவர்களில் முதல்வன். தில்லைவாழந்தணருக்கு நடராசப் பெருமானே வழிபடுவதை யன்றி வேறு வேலையும் கடமையும் இல்லை. அவர்களுக்கு அதுவே தொழில் அதுவே பொழுதுபோக்கு அதுவே அறம், அதுவே பொருள்தரும் ஆறு, அதுவே இன்பந்தரும் இராசராச சோழனுலா.இ0.1 தென் இந்திய சிலாசாசனங் கள், 1913-ஆம் u 6-ஆவது; 1921ஆம் u 285-ஆவது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிற்றம்பலம்.pdf/14&oldid=583621" இலிருந்து மீள்விக்கப்பட்டது