பக்கம்:சிற்றம்பலம்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிற்றம்பலம் §

செயல்; அதுவே வீட்டு நெறி. அவர்களுடைய வழி பாட்டை ஏற்று மகிழும் சிற்றம்பலத்துப் பெருமானத் திருஞானசம்பந்தர் பாடுகிருர். - i

அவர் பாடிய தேவாரத்தில் மூன்ரும் திருமுறையில் முதல் திருப்பதிகம் சிற்றம்பலத்தைப் பற்றியது. உயர்ந்த வர்கள் உறைகின்ற தில்லையில், பண்டைக் காலம் முதல் நாளுக்கு நாள் புகழ் ஏறிவருகின்ற சிற்றம்பலத்தில் எழுங் தருளியிருக்கும் ஈசனே, ஊறும் இன்தமிழும் இசையும் கலந்து விளங்க இத் திருப்பதிகத்தைப் பாடியருளினர்.

இறைவனுக்கு நாள்தோறும் சிற்றம்பலத்தில் பூசை கிகழ்கின்றது. இப்போது சந்திரமெளளிசுவரர் என்று வழங்கும் ஸ்படிகலிங்கப் பெருமானுக்கும் ரத்தினசபாபதி என்ற திருமேனிக்கும் நாள்தோறும் அபிடேகங்கள் உண்டு. நடராசப் பெருமானுக்கு ஆண்டுக்கு ஆறுமுறை அபிடேகம் நிகழும். . ; : -

சிற்றம்பலத்தில் இறைவனுக்கு நடைபெறும் ஆரா தனக்கு என்ன குறை? அபிடேகத்தின் சிறப்பை எவ்வளவு சொன்னலும் தகும். இறைவன் நறு நெய்யிலே ஆடுகிருன்; பாலிலே ஆடுகிருன் , தயிரிலே ஆடுகிருன். இவ்வளவு ஆட்டும் நடைபெறுவதற்கு அங்குள்ள மூவா யிரவராகிய அந்தணர்களின் அன்பே காரணம். அவர்கள் என்றும் நடராசமூர்த்தியைப் பிரியாமல் உறைகிறவர்கள். அவர்கள் பிரியாத சிற்றம்பலத்தைச் சிறந்த திருக் கோயிலாகவும் தனக்கு விருப்பமான இடமாகவும் காடி

  • "நாறு பூம்பொழில் கண்ணிய காழியுள் - நான்மறை வல்ல ஞான சம்பந்தன், ஊறும் இன்தமிழால் உயர்ந்தார் உறை கில்லே தன்னுள், ஏறு கொல்புகழ் எந்து சிற்றம்பலத் - திசனே இசையாற் சொன்ன பத்திவை, கூறுமாறு வல்லார் உயர்ந்தாரொடுங் கூடு வரே என்பது திருக்கடைக் காப்பு.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிற்றம்பலம்.pdf/15&oldid=563158" இலிருந்து மீள்விக்கப்பட்டது