பக்கம்:சிற்றம்பலம்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிற்றம்பலம் 7

இருப்பவன். அதனை அருளிச் செய்தவனே அவன்ருன். அது மேலும் மேலும் வளரும்படி செய்கிறவனும் அவனே. உலகில் வேறு யாரும் வேதத்தைப் பாடாமல் இருந்து விட்டாலும் அவன் அதைப் பாடுதல் ஒழியமாட்டான். வேதம் கித்தியமானது என்று சொல்லும் சொல்லப் பொருளுடைய தாக்கும் பிரான் அவன். வேதத்தோடு வேறு பல கீதங்களையும் அவன் பாடுகின்ருன்.

பாடி ய்ைமறை யோடுபல் கீதமும்.

(மறை - வேதம். கீதம் - வேறு வகையான பாடல்கள். வேத

மும் பாடலாதலின் அதனையும் பாடினுய் என்றர்.)

★ -

சிறந்த அபிடேகப் பொருள்களால் ஆடுதலே ஏற். றருளி அருச்சனையையும் உவந்தருளி அந்தணர் பிரியாத சிற்றம்பலத்தில் எழுந்தருளிய இறைவன் வேதமும் கீதமும் பாடும் இனியகை இருக்கிருன். இவ்வளவும் அவனுடைய உயர்வைப் புலப்படுத்துகின்றன. அவனது தொடர் புடைய பொருள்கள் யாவும் சிறந்தவை என்று எண்ணு கிருேம். அவை அவனுடைய பெருமையைப் புலப்படுத்து கின்றன. :

ஆனல் அவன் சிரத்திலே பல சடைகள் இருக்கின்றன. அவற்றினிடையே அவன் அணிந்துள்ள சந்திரன் மாத்திரம் மேலே சொன்ன பொருள்களோடு ஒன்ருக வைத்து எண்ணுவதற்கு உரியதாகத் தோன்றவில்லை. அது முழு மதி அன்று குறைமதி, அழகிய கிறம் உடையதன்று : வெறும் வெண்திங்கள். உள்ளிடு இல்லாத பொருளே வெள்ளே என்று சொல்வது வழக்கம். முழுமையும் உள் ளிடும் இல்லாத பொருளாக இருக்கிறது திங்கள். அத னிடத்திலிருந்து வரும் கதிரோ குளிரை உடையது ; பணியைக் காலும் கதிர். அந்தச் சந்திரனுடைய பழங் கதையை கினைத்தாலோ உள்ளம் படபடக்கும். சந்திரன்.

§.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிற்றம்பலம்.pdf/17&oldid=563160" இலிருந்து மீள்விக்கப்பட்டது