பக்கம்:சிற்றம்பலம்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§ சிற்றம்பலம்

தன் குருவின் இல்லாளே விரும்பின பாவி ; இறைவனே மதிக்காமல் தக்கன் செய்த யாகத்திற்கு உணவிச்சையால் சென்ற குற்றவாளி. பழியும் பாவமும் கிரம்பியவன். பாவஞ் செய்து உடல் குறைந்து உள்ளிடின்றிஇருக் கும் அவனே இறைவன் தன் தலையின்மேற் குடியிருக் கிருன். எந்தத் திருமுடியின்மேல் சிற்றம்பலத்தைப் பிரியாமல் உறைகின்ற அந்தணர்கள் நறுநெய்யும் பாலும் தயிருங் கொண்டு அபிடேகம் செய்கிருர்களோ, எந்தத் திருமுடியின்மேல் மலர் இட்டு அருச்சனே செய்கிருர்களோ, எந்தத் திருமுடியின்மேல் இறைவன் நறுங்கொன்றையை ாயந்து கண்ணியாகச் சூடியிருக்கிருனே, அந்தத்திருமுடியில் பாவம்செய்த உள்ளமும் உருக்குலேந்த உடம்பும் வெண்மை நிறமும் பனிகாலும் கதிரும் உடையவன் இருக்கிருன் !

இதற்குக் காரணம் என்ன? இறைவனுடைய கருணை தான். சந்திரனுடைய பாவத்தை மறந்து, புண்ணியம் செய்யும் அந்தணர் ஆட்டும் அபிடேகத்தை அவனும் பெறும்படி திருமுடிமேல் வைத்தான். இன்று தில்லையில் காள்தோறும் அபிடேகம் செய்யப்பெறும் பெருமானுக்குச் சந்திரமெளளிசுவரர் என்ற திருகாமம் வழங்குதல் கினேவு கொள்வதற்குரியது. இறைவன் திங்களைச் சூடியவன் என்பதை கினைப்பிக்கும் திருகாமம் அல்லவா அது? பொன் நிறமும் பொலிவும் பெற்ற நறுங்கொன்றையை இயந்த முடியில் திங்களே வைத்தான். சந்திரன் இறைவனுடைய திருவடியால் தேய்க்கப் பெற்றன். எப்படியோ அடியின் தொடர்பு உண்டாயினமையின் அவன் தன் பாவமும் பழியும் நீங்கப் பெற்று உயர்ந்த இடத்தில் ஏறிக்கொண் டான். அவனுடைய பழம்பழி நீங்கியது ; தொல்வினை தொலைந்தது.

முதலில் மூவாயிரம் அந்தணர் அபிடேகம் செய்து அருச்சிக்கும் இறைவனேக் காணும்போது, இவன் அருள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிற்றம்பலம்.pdf/18&oldid=563161" இலிருந்து மீள்விக்கப்பட்டது