பக்கம்:சிற்றம்பலம்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அதுவோ அருள் ?

திருஞான சம்பந்தப் பெருமான் திருவாவடுதுறை யென்னும் திருத்தலத்துக்கு வந்து சில காலம் தங்கினர். அத் தலம் சோழ நாட்டில் காவிரிக்குத் தென் கரையில் உள்ளது. உமாதேவியார் பசுவின் திருவுருவம் எடுத்து இறைவனைப் பூசிக்கப் பெருமான் எழுந்தருளி அத்தேவியின் பசுவுருவத்தை நீக்கி அணைத்துக்கொண்டு கின் முன். ஆவின் திருவுருவத்தை மாற்றிய தலமாதலின் ஆவடுதுறை என்ற திருகாமம் உண்டாயிற்று.

இந்தத் தலத்தில் ஞானசம்பந்தர் தங்கியிருந்தபோது அவருடைய தந்தையார் தம் மரபுக்கு ஏற்பச் செய்ய வேண்டிய வேள்வியைப் புரிய எண்ணினர். தம்முடைய ஊராகிய சீகாழிக்குச் சென்று பிற அந்தணர்களுடன் சேர்ந்து வேள்வி செய்யப் பொருள் வேண்டியிருந்தது. இச் செய்தியை அவர் ஆளுடைய பிள்ளையாரிடம் தெரிவித்தார். தமக்கு என்றும் குறைவிலாத நிதியாக இருப்பவன் சிவ பெருமானே என்று நம்பி வாழும் திருவருட் செல்வராகிய சம்பந்தர் திருவாவடுதுறை ஆலயத்திற்குட் சென்று, "தாம் வேள்வி செய்வதற்குரிய பொருள் வேண்டும் என்று எங்தையார் கேட்டார். என் கையிலே பொருள் இல்லை. கேட்பாருக்குக் கொடுக்க இயலாமல் எம்மை வைப்பது தான் திருவருளுக்கு அழகோ' என்ற கருத்தோடு ஒரு திருப்பதிகத்தைப் பாடினர். - .

அப்போது இறைவன் திருவருளால் ஒரு பூதம் அங்கே வந்து ஆயிரம் பொன்னேயுடைய கிழி ஒன்றை முன்னே இருந்த பீடத்தில் வைத்துச் சென்றது. அதைக் கண்டு இறைவன் அருளே எண்ணி வியந்து பாராட்டி உருகிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிற்றம்பலம்.pdf/21&oldid=563164" இலிருந்து மீள்விக்கப்பட்டது