பக்கம்:சிற்றம்பலம்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அதுவோ அருள்? 13

இப்போது தங்தையார் பொருள் வேண்டும் என்று கேட்டபோதுதான் சம்பந்தப் பெருமானுக்குப் பொன் என்ற ஒன்று இருப்பது வினேவுக்கு வந்தது. தந்தையாருக்கு வேண்டிய பொன்னை அளிக்க முடியாத சில தமக்கு இருப்பதை அவர் உணர்ந்தார். அவர் மனம் சிறிது தளர்ச்சி அடைந்தது. உடனே அது நீங்கியது. 'அந்த மில்பொருள் ஆவன ஆவடு துறையுள் எங்தையார் அடித்தலங்கள் அன்ருே?" என எண்ணினர்; உள்ளத்தே ஒர் எழுச்சி உண்டாயிற்று. -

எத்தகைய இடர்ப்பாடு வந்தாலும், எத்தகைய குறைவு நேர்ந்தாலும், எத்தகைய துயரம் புகுந்தாலும் அவற்றை நீக்கி இன்பக் தருவது இறைவன் திருவடியே என்ற உறுதிப்பாடு உடையவர் அவர். ஆகவே இப்போது இறைவனுடைய திருக்கழலேத் தொழுதால் வாட்டம் நீங்கி எழலாம் என்று உணர்ந்தார். 輕。

மனிதருக்கு வரும் துன்பங்கள் மூன்று வகை. அவற். றைத் தாபத்திரயம் என்று சொல்வர். அவை ஆதி தைவிகம், ஆதி பெளதிகம், ஆத்தியாத்மிகம் என்பவை. மக்களாகப் பிறந்தார் இம் மூவகைத் துன்பங்களையும் அடைவர்.t

மழை, காற்று, இடி, வெப்பம், காலமாறுபாடு, பூகம் பம் முதலியவற்ருல் வரும் இடர்களே ஆதிபெளதிகம் என்று சொல்வர். பிறக்கும்போது உண்டாகும் துன்பம், நரை, திரை, மூப்பு, சாக்காடு என்பவற்றை ஆதிதைவிகத்

  • பெரியபுராணம், கிருஞான. 423. t பிறவித் துன்பங்களாவன தன்னைப்பற்றி வருவனவும், பிற வுயிர்களைப்பற்றி வருவனவும், தெய்வத்தைப்பற்றி வருவனவும் என மூவகையான் வருந்துன்பங்கள் (திருக்குறள், 4. பரிமேலழக்ர் உரை.)
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிற்றம்பலம்.pdf/23&oldid=563166" இலிருந்து மீள்விக்கப்பட்டது