பக்கம்:சிற்றம்பலம்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#6 சிற்றம்பலம்

அமரர்களுக்கு வந்த இடரைப் போக்கினவன் அவன். அது அவர்கள் தங்களுடைய ஆற்றலால் நீக்க முடியாத இட ராக இருந்தது; அவர்களுடைய உயிருக்கே முடிவாக வந்தது. பாற்கடலைக் கடைந்தபோது அமுதம் வருமென்று அமரர் எதிர்பார்த்தார்கள். ஆனல் அது தோன்றுவதற்கு முன் ஆலகால விடம் தோற்றியது. அந்த நஞ்சை மாற்ற அவர்களால் இயலவில்லை. கடல்தனில் இனி வரவிருந்த அமுதத்தோடு கலக்க இருந்தது அந்த கஞ்சு. ஆல்ை, இறைவன் அமரர் வேண்ட அதனே எடுத்துத் தன் திரு மிடற்றினில் அடக்கினன். உண்ட நஞ்சு மீண்டும் வெளி வந்தால் முன்ன்ேருருக்கு அழிவு நேரும். திருவயிற்றுக்குட்

போனல் அங்குள்ள உயிர்களுக்கு அழிவு உண்டாகும். அதனால் அந்த நஞ்சுக்கு வேலேயே இல்லாதபடி தன்னு டைய கழுத்தில் அடக்கிக்கொண்டான் இறைவன்.

இடரினும் தளரினும் நோய் தொடரினும் உன் கழல் தொழுவேன்; இடர் முதலியவை உன் திருவருளால் நீங்கிவிடும் என்ற உறுதி எனக்கு உண்டு. தேவர்களின் உயிருக்கே இறுதியாக வந்த பேரிடரை நீக்கினவன் நீ அல்லவா?” என்று கினேக்கும்படி ஞானசம்பந்தர் தம் செயலேயும் பண்டை வரலாற்றையும் இணைத்துப் பாடு கிரு.ர். --

கடல் தனில் அமுதொடு கலந்தநஞ்சை மிடறினில் அடக்கிய வேதியனே!

(கிருப்பாற் கடலில் அமரர் அமுது கடைந்த காலத்தில் அதைேடு கலந்து இனமாக வந்த நஞ்சைத் திருக்கழுத்தில் அடக்கி யருளிய வேதப் பொருளானவனே!

கலந்த என்றது ஒரிடத்தில் தோன்றியதை கினேந்தது. அமுது வரும் வரும் என்று எதிர்பார்த்தனர் அமார்; அப்போது வங்க தாதலின் அமுதொடு கலந்த நஞ்சு என்றர். வேதியன் - வேதப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிற்றம்பலம்.pdf/26&oldid=563169" இலிருந்து மீள்விக்கப்பட்டது