பக்கம்:சிற்றம்பலம்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 சிற்றம்பலம்

என்னிடம் காட்டாமல் இது காறும் இருந்தாயே!” என்று குறையுறுகிருர் சம்பந்தர்.

"எனக்கு வேண்டியனவற்றை நான் வேண்டாமலே பாலித்தருளும் பிரான் .ே இப்போது நான் எங்தையாருக்குப் பொருள் வழங்க வேண்டும். அவருக்கு அதனை வழங்கும் ஆற்றல் எனக்கு இல்லை. உன் அடியான் இப்படித் தன்பால் ஒன்றை வேண்டினர்க்கு அதனே அளிக்கமுடியாமல் கைந்து வாடுதல் நின் அருளுக்கு அழகோ உலகில் உள்ள வள்ளல் களின் அருள்போல, என்னளவில் வேண்டிய பொருள் கிடைக்கச் செய்தது போதுமா? உன் அருள் பிறர் செய்யும் அருளினும் இனியது அல்லவா? உத்தம வள்ளல் ஒருவன் கேளாத முன்பே குறிப்பறிந்து அவனுக்கு வேண்டியவற் றைக் கொடுப்பான். உத்தமோத்தம வள்ளலாகிய நீ கான் கேளாத முன்பே குறிப்பறிந்து, என்பால் வேண்டினருக்கு நான் உடனே ஈயும் வண்ணம் அருள் செய்யவில்லையே! இதுதான கினது இன்னருள்? ஆவடுதுறையில் எழுந்தருளி யிருக்கிற சிவபெருமானே!"

இதுவோண்மை ஆளுமாறு?

ஈவதுஒன்று எமக்கு இல்லையேல்,

அதுவோஉனது இன்னருள்

ஆவடுதுறை அரனே!

(இதுதான நீ அடியார்களாகிய எங்களை ஆளும் வகை? எங்கள்பால் வந்து இரந்தாருக்குக் கொடுப்பதற்கு ஏற்ற பொருள் ஒன்றும் எம்மிடம் இல்லையானல், அந்த நிலையை எங்களுக்கு அளிப்பதுதான நின்னுடைய இனிய அருள்? கிருவாவடுதுறையில் எழுந்தருளி யிருக்கும் சிவபெருமானே!

இது என்றது தம் கிலேயை ஈவது ஒன்று பிறருக்குக் கொடுக் கும் ஒரு பொருள். அது என்றது தம்மை அந்த கிலேயில் கிறுத்தி யதைச் சுட்டியது. அருளென்றது பிறர்பாற் செல்லாமல் வேண்டியவற்றை அடியார்களுக்குத் தருவது; இன்னருள் என்றது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிற்றம்பலம்.pdf/28&oldid=563171" இலிருந்து மீள்விக்கப்பட்டது