பக்கம்:சிற்றம்பலம்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இங்கும் அங்கும் சீகாழியில் திருத்தோணியில் எழுந்தருளியிருந்த இறைவன் இன்று திருக்கோயிலில் ஒரு கட்டு மலைமேல் பெரிய திருவுருவத்துடன் வீற்றிருக்கிருன். அருகில் உமா தேவியார் எழுந்தருளி யிருப்பதால் உமாபாகன் என்ற திரு காமமும் இப் பெருமானுக்கு வழங்குகிறது. இறைவன் உமாதேவியாரோடு எழுந்தருளியிருக்கும் இந்த அழகிய திருக்கோலத்தைக் கண்டு களித்த திருஞானசம்பந்தமூர்த்தி நாயனர், அவ்வாறு இறைவன் உலகமுய்யப் பெண்ணின் கல்லாளொடும் இருந்த பெருந்தகைமையை கினேந்து உருகி ஞர். அவர் உள்ளம் இறைவனுடைய கருணேப் பெருக்கின் கினேவிலே ஊறி இன்புறும் பொழுதெல்லாம் அதன் விளைவாகத் திருப்பாட்டு எழும். ஆகவே இப்போதும் ஒரு திருப்பதிகம் எழுந்தது.

'பெருந்தகையாகிய எம்பெருமான் பெண்ணினல்லா ளாகிய எம்பிராட்டியோடு கழுமலவள நகராகிய சிகாழி யில் எழுந்தருளி யிருக்கும் கருணைதான் என்னே! என்ற வியப்பு அவர்பால் உண்டாயிற்று.

அதில் என்ன வியப்பு? இறைவன், குணம் குறி கடந்தவன்; பிறப்பு இறப்பு இல்லாதவன். அவனுடைய கிலே இன்னதென்று வரை யறுத்துக் கூறுவார் யாரும் இலர். வேதமும் கூறவில்லே. அவ்வாறு யாவும் கடந்த பொருளாகிய அவன், அருளே கண்ணுகக் காணும் அன்பர்களுக்குத் தன்னுடைய அடையாளமாகிய திருவுருவங்களைக் காட்டினன். அவன் அருளிய அக்காட்சியினல் இன்புற்ற அருட்பெருஞ் செல் வர்கள் தாம் கண்ட திறத்தை உலகினருக்கு உணர்த்தினர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிற்றம்பலம்.pdf/32&oldid=563175" இலிருந்து மீள்விக்கப்பட்டது