பக்கம்:சிற்றம்பலம்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 சிற்றம்பலம்

நல்லது என்பது செய்யுளை நோக்கி நல்லஃது என்று விரிக் தது; விரித்தல் விகாரம். இருந்ததே. இருந்தது என்னே என்றும் பொருளினையுடையது. என் என்பது அவாய் கிலேயால் வருவித்து முடித்தற்குரியது.)

- ★ - -

பெருந்தகை இன்னவாறு இருந்தான் என்று சொல்ல இயலாவிட்டாலும் அவ்வாறு இருப்பதல்ை உண்டாகும் பயன் இன்னதென்று தெரியும். அருள் திருமேனி தாங்கி அம்மையுடன் எழுந்தருளி யிருப்பதற்குக் காரணம் அவன் தன்னே யாவரும் எளிதில் வணங்கி நற்பயன் அடைய வேண்டும் என்னும் கருணேதான். இறைவனே வணங்கு வதனால் இம்மைப் பயனும் மறுமைப் பயனும் ஒருங்கே உண்டாகும். பெண்ணினல்லாளொடும் அமர்ந்திருக்கும் பெருந்தகையை அம்மையும் அப்பனுமாக வணங்குவது. அன்பர்கள் இயல்பு. உயிர்களுக்கெல்லாம் எக்காலத்தும் எவ்விடத்தும் தொடர்ந்து கின்று தனுகரண புவன போகங் களே வழங்கியருளும் அம்மையும் அப்பனுமாக இருப்பவர் கள் அவர்களே. அவர்களே அம்மையப்பர் என்பதை உணர்ந்து கொண்டவர்களுக்கு உலகத்து ஆருயிர்கள் அனேத்தும் அவர்களுடைய மக்கள் என்ற உணர்வு தலைப் படும். அந்த உணர்வு முறுக முறுக ஜீவதயையும், பகை யின்மையும், தன்னல மறுப்பும், தியாக புத்தியும் உண் டாகும். அதனுல் உலகத்து உயிர்கள் இனிது வாழ வகை. உண்டாகும். எல்லா உயிர்களிடத்தும் தயை உடையராக வாழ்வாரிடம் எல்லா உயிரும் அன்பு செய்யும். அதனல் இம்மையில் யாவரும் போற்ற வாழும் வாழ்வு உண்டாகும். ஆணும் பெண்ணுமாக எழுந்தருளி யிருக்கும் இறை வன், மனித வாழ்வில் ஆணும் பெண்ணும் ஒன்றி வாழ்ந்து, அறம் செய்யும் வகையை நினைப்பூட்டுகிருன். ஆணும்

  • “அம்மையப்ப ரேஉலகுக் கம்மையப்பர் என்றறிக, அம்மை யப்பர். அப்பரிசே வந்தளிப்பர். (திருக்களிற்றுப்படியார், 1.)
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிற்றம்பலம்.pdf/36&oldid=563179" இலிருந்து மீள்விக்கப்பட்டது