பக்கம்:சிற்றம்பலம்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 - சிற்றம்பலம்

றனர். வெளியே கடகரி வழிபடுகிறது. எங்கும் பக்தியின் மணம் வீசுகிறது. - மானமா மட்ப்பிடி வன்கையால் அலகிட்க் கானம்ஆர் கட்கரி வழிபடும் கானப்பேர். (பெருமைமிக்க மென்மையுடைய பிடி தன் வலிய கையில்ை அலகிட்டுப் பெருக்க, அவ்விடத்தில் காட்டில் வாழும் மதத்தை யுடைய ஆண் யானே இறைவனே எண்ணிப் பூசித்து வழிபடும் திருக்கானப்பேர்.

மானம் - பெருமை. மா - பெரிய மிகப் பெரிய என்றபடி, அல்கிடுதல் . பெருக்குதல். கடகரி - மதத்தையுடைய களிறு. கடம் . மதம். கானப்பேர் - காளையார் கோயில் என வழங்கும் தலம்.)

திருஞானசம்பந்தர் பாண்டி காட்டில் உள்ள தலங் களுக்குச் சென்று வழிபட்டபோது திருக்கானப் பேருக்கும் வந்தார். இத்தலம் இப்போது காளேயார் கோயில் என வழங்குகிறது. இங்கே வந்தபோது தலத்தைப்பற்றிய செய்திகளே விசாரித்தார். "இந்திரனுடைய யானையாகிய ஐராவதம், ஒரு சாபத்தால் காட்டானேயாகி இங்கே வந்து பூசித்துத் தன் முன்னே கிலேயைப் பெற்றதென்பது தல வரலாறு” என்ற செய்தியைக் கேள்வியுற்ருர். சிறிது கற் பனைக் கண்ணேக்கொண்டு பார்த்தார். ஐராவதம் இங்கே காட்டானேயாக வந்தால், அதனுடைய மனேவியாகிய

  • சுந்தரமூர்த்தி நாயனர் திருச்சுழியலுக்கு வந்திருந்தபோது அவருடைய கனவில் இறைவன் கட்டிளங்காளை போலத் தோன்றி, "யாம் இருப்பது கானப்பேர்" என்று அருளியமையால் இறைவனுக்குக் காளையென ஒரு திருநாமமும், இத்தலத்துக்குக் காளேயார் கோயில் என்ற கிருநாமமும் உண்டாயின (பெரிய புராணம், கழறிற்றறிவார். 112, 118); "கண்டு கொழப்பெறுவ தென்று கொலோ அடியேன் கார்வயல் சூழ்கானப் பேருறை காளையையே. (சுந்தார் தேவாரம்.) - r
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிற்றம்பலம்.pdf/40&oldid=563183" இலிருந்து மீள்விக்கப்பட்டது