பக்கம்:சிற்றம்பலம்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 சிற்றம்பலம்

'மஞ்ஞை ஆலும் மாம்பயில் இறும்பின்

கலபாய்ந்து உதிர்த்த மலர்வீழ் புறவின் மந்தி சீக்கும் மாதுஞ்சு முன்றில் செந்திப் பேணிய முனிவர் வெண்கோட்டுக் களிறுகரு விறகின் வேட்கும். ஒளிறிலங் கருவிய மலே' ' என்பது பெரும்பானுற்றுப்பட்ை.

மந்தியும் களிறும் தீவேட்கும் முனிவர்களுக்கு ஆவன புரிதலேக் கடியலூர்:உருத்திரங்கண்ணனர் என்னும் புலவர் இவ்வாறு பாடுகிருர். இதற்கு உரை எழுதிய நச்சினுர்க் கினியர், மந்தி சீத்தலும் மா துஞ்சலும் களிறு விறகு தருதலும் இருடிகளாணேயால் விகழ்ந்தனவென்று உணர்க' என்று இங்கே காரணத்தைப் புலப்படுத்தினர்.

"கான யானே தந்த விறகிற்

கடுந்தெறற் செந்தி வேட்டு' t என்பது மாற்பித்தியார் என்பவர் பாடியது. இதன் உரை யாசிரியர், 'கான யானே தந்த விறகென்றது இவன் தவ மிகுதியான் அதுவும் ஏவல் செய்தல்' என்று எழுதினர்.

எனவே மானமா மடப்பிடி வன்கையால் அலகிடுத லும், கானமார் கடகரி வழிபடுதலும் இயற்கைக்கு முரண் பாடான செயல் அல்ல. பண்டைப் புலவர்களும் இத் தகைய காட்சிகளைப் பாடியிருப்பதளுல் இது புலகிைறது.

- 亨容 - -- * மயில்கள் ஆரவாரிக்கும் மரம் நெருங்கிய இளமரக் காட் டையும், குரங்குகள் பாய்ந்து உதிர்த்த மலர்கள் சிந்தின காட்டினை யும் உடையதும், மங்கிகள் குப்பையைப் பெருக்கும் முன்னிடத்தில் தீயைப் போற்றும் முனிவர் வெள்ளிய தந்தத்தையுடைய களிறு கொணர்ந்து தரும் விறகினல் வேள்வி புரிவதற்கிடமாகியதும் விளங்கும் அருவியை உடையதுமாகிய மலை என்பது இதன் பொருள். - - - - -

t புறநானூறு, 251 : 5-6.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிற்றம்பலம்.pdf/42&oldid=563185" இலிருந்து மீள்விக்கப்பட்டது