பக்கம்:சிற்றம்பலம்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"ஞானமலர் 33

வேறு ஒரு வகையிலும் இந்தப் பாட்டுக்குப் பொருள் கொள்ள வழி உண்டு. பெரியோர்கள் சில செய்திகளைக் குறிப்பு வகையால் கூறுவது வழக்கம். மனத்தை வண்டாக வைத்து வண்டைப் பார்த்துச் சொல்லுவதுபோல ம்னத் துக்கு அறிவுரை கூறுவார்கள். மனத்தைக் குரங்காக வைத்துப் பேசுவார்கள். மக்கள் செய்யும் செயலே விலங்கு களின்மேல் வைத்துச் சொல்வார்கள்.

காதலைப்பற்றிப் பலபடியாக விரித்துரைக்கும் சங்கப் பாடல்களில் மக்களிடையே நிகழும் காதல் நிகழ்ச்சிகளைப் பல்வேறு வகையிலே புலவர்கள் பாடி யிருக்கிரு.ர்கள். அன்றியும் விலங்கினங்களும் பறவைகளும் காதல் செய்யும் காட்சிகளையும் எடுத்துச் சொல்வார்கள். அந்தப் பாடற் பகுதிகளுக்கு உள்ளுறை ஒன்று இருக்கும். விலங்கினங் களின்மேல் ஏற்றிச் சொன்னலும் காதலன் காதவியர் செய்கையைக் குறிக்கும் உட்கருத்து ஒன்று. அதனும் புலப்படும். இறைச்சி யென்றும் உள்ளுறை யென்றும் இந்தக் குறிப்புநெறி இரண்டு வகைப்படும். -

அந்த முறையில் பக்தித் தமிழிலும் உள்ளுறை அமையும்படி பாடும் வழக்கம் உண்டு. .

இங்கே சம்பந்தப் பெருமான், மடப்பிடி அலகிடக் களிறு வழிபடுவதாக அமைந்த காட்சிக்கும் உள்ளுறை காணலாம். யானேயை ஆணவத்துக்கு அறிகுறியாகச் சொல்வது வழக்கம். மதத்தினம் சிறப்பது யானே; மதம், செருக்கு, ஆணவம் எல்லாம் ஒன்றுக்கு ஒன்று இனமான வையே. செருக்கு மிக்க மனிதன் யாருக்கும் தலைவனங் காமல் தருக்குற்றுத் திரிவான். அப்படி உள்ளவனே மதயானே என்று சொல்லலாம். பிற இடங்களில் செருக்கு மிகுதியால் தலைவனங்காமல் கடந்து, தனக்கு ஏற்பத் தருக்கி நிற்கும் மனேவியுடன் வாழும் மனிதனும் திருக் கானப் பேருக்கு வந்தால் இறைவன் திருவருளால் தன்

சிற். 8

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிற்றம்பலம்.pdf/43&oldid=563186" இலிருந்து மீள்விக்கப்பட்டது