பக்கம்:சிற்றம்பலம்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞான மலர் 35

இறைவனே நணுகுவார் அவனே வழிபடுவதற்கு மல ரைக் கொண்டு செல்வது வழக்கம். வெறும் மலர்களைக் கொண்டு போய்ப் பூசித்தால் போதாது. இறைவனிடம் உண்மையான அன்புவைத்துப் பூசிக்கவேண்டும். கையிலே உள்ள மலர் வெறும் அடையாள மாத்திரமாக இருப்பது தான். மனம் பொருந்திப் பூசிக்கும் பூசைக்குத்தான் பயன் உண்டு. மனம் பொருந்த வேண்டுமானல், இறைவனே நமக்கு எல்லாம் தருபவன் என்ற ஞானம் வேண்டும்.

மனம் என்பது ஒரு மலர்க்கொடி. அதில் மணமற்ற மலரும் பூக்கும்; மனமுள்ள மலரும் மலரும். பக்தி, ஞானம், வைராக்கியம், கருணை என்பவை போன்ற மலர் களும் அந்த மனத்தில் மலரும் மலர். நல்ல மலர்கள் மலர் கின்ற மனத்தோடு சென்ருல்தான் இறைவன் அருள் கிடைக்கும். திருக்கானப்பேர் இறைவன் இந்த உடம் பைத் தரும் பிறவி நோயையே போக்குபவன் என்ற ஞானம் வேண்டும். பிறவிப் பெரு நோயையே நீக்கும் இறைவன் ஊனமாம் உடம்பினில் உறுபிணி கெடும்படி செய் வான் என்ற அறிவுவேண்டும். இந்த ஞானமாகிய பெரிய மலர் மனத்திலே பூத்தால் அந்த மலரோடு செல்லுவாருக்கு விச்சயமாக கற்பயன் உண்டாகும்.

ஊனமாம் உடம்பினில் உறுபிணி கெடஎண்ணின் ஞானமாம் மலர்கொடு நனுகுதல் நன்மையே. (குறைகள் கிரம்பிய உடம்பினில் அடைகின்ற நோய்கள் கெடும்படி நினைத்தால், அவ்வாறு கினேப்பவர்கள் ஞானமாகிய மலரைக் கொண்டு (கானப்பேரை) அடைதல் நன்மையாகும்.

ஊனம் - குறை, ஊன் என்பது அம்முச் சாரியை பெற்றது என்று கொண்டு, ஊன் குவையாகிய உடம்பு என்றும் பொருள் கொள்ளலாம். உறுபிணி - அடையும் நோய்; மிக்க நோய் என்றும் சொல்லலாம். ஞானம் ஆம் மலர்; ஞானமாகிய மா மலர் என் றும் கொள்ளலாம்; மனத்திலே தோன்றுவனவற்றுள் சிறந்ததா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிற்றம்பலம்.pdf/45&oldid=563188" இலிருந்து மீள்விக்கப்பட்டது