பக்கம்:சிற்றம்பலம்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 சிற்றம்பலம்

கவின் மாமலர் என்று சொல்வதும் பொருந்தும். கணுகுதல் - அடைதல், கானப்பேர் கணுகுதல் என்று கூட்ட வேண்டும். கானப்பேர் கணுகுதல் என்று சொன்னலும் அங்கு எழுந்தருளி யுள்ள இறைவன்பாற் சென்று வழிபடுவதையே கினேந்தார். மலர் கொண்டு செல்லுதல் வழிபாட்டிற்காகத்தானே?)

களிறு மலர் கொண்டு சென்று பூசிக்கும் இடத்தில் ஆறறிவுடைய மனிதன் அந்த யானையைப்போல வெறும் மலரை மாத்திரம் கொண்டு சென்ருல் போதுமா? தங்கள் தங்கள் தகுதிக்கு ஏற்ப வழிபடுவதுதான் முறை. ஆகவே அறிவுடைய மனிதன் தன் அறிவுச் சிறப்புக்கு ஏற்ப மற்ற மலர்களோடு ஞானமென்னும் மலரையும் கொண்டுசெல்ல வேண்டும். உடம்பில் ஊனம் இருந்தாலும் உள்ளத்தில் ஞானம் இருக்கலாம். இறைவன் உடம்பு ஊனத்தைப் பாராமல் ஞானத்தைத்தான் பார்த்து அருள் புரிவான். அவனே வணங்கில்ை இம்மையிலே கைமேற் பயன் பெற லாம்; உறுபிணி கெட நன்மை பெற்று வாழலாம்.

சம்பந்தப்பெருமான் பல இடங்களில் இறைவன்பால் அன்பு செய்வாருக்கு இம்மையிலும் மறுமையிலும் இன்பம் கிடைக்கும் என்பதை வற்புறுத்துவார். இந்தப் பாசுரத் தில் இம்மை வாழ்வில் இன்பம் பெறுதலேத் தனியே எடுத் துச் சொன்னர். உலகத்தில் நன்மையுடன் வாழ்வதற்கும் இறைவனுடைய அன்பு பயன் படும் என்னும் உண்மையை இதல்ை தெரிந்து கொள்கிருேம். - மான்மர் மடப்பிடி வன்கையால் அலகிடக்

கானமார் கடகரி வழிபடும் கானப்பேர் ஊனமாம் உடம்பினில் உறுபிணி கெடஎண்ணின் ஞானமா மலர்கொடு நணுகுதல் நன்மையே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிற்றம்பலம்.pdf/46&oldid=563189" இலிருந்து மீள்விக்கப்பட்டது