பக்கம்:சிற்றம்பலம்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அாற்றுங்கள் 39

உலகில் மக்கள் தமக்கு அல்லல் உண்டாகும் காலத் தில் மற்ற மக்களை நாடிப் பரிதவித்துக் கெஞ்சி உள்ளம் கைந்து புலம்பி முறையிடும் வகைக்கு ஒர் எல்லே இல்லை. ஏழை பணக்காரன் காலில் விழுகிருன். நோயாளி வைத் இயன் காலில் விழுகிருன். பலமற்றவன் பலசாலி காலில் விழுகிருன். பணக்காரன் மருத்துவகை இருப்பதில்லை; பலசாலியாகவும் இருப்பதில்லை. அதனால் பணக்காரனே மருத்துவன் காலிலும் பலசாலி காலிலும் அறிவுடையோன் காலிலும் விழும் காலம் உண்டு.

எல்லாக் குறைகளேயும் போக்கும் மனிதன் யாரும் இல்லை. சில குறைகளைப் போக்கும் மனிதர்கள் கூடத் தம்முடைய ஆற்றலால் போக்குவதில்லை. இறைவன் இரு வருள் இயக்குவதால்தான் அவ்வாறு செய்கிருர்கள். எல் லாப் பணக்காரரும் ஏழைகளுக்கு உதவி செய்கிறதில்லை. இறைவன் திருவருள் எங்கே இருக்கிறதோ அங்கே தான் ஈகை இருக்கிறது. மருத்துவன் தன்பால் வரும் எல்லா நோயாளிகளின் நோய்களேயும் தீர்த்துவிட முடிகிறதில்லை. அவனுல் தீர்க்க முடியாத வலிய பிணிகளும் உண்டு. மக்களால் துன்பம் நீங்குமென்பது உறுதியானல் எல்லாத் துன்பங்களும் அல்லவா நீங்கவேண்டும்? கம் முடைய கண்ணுக்குத் தெரியாமல், அங்கங்கே இறைவன் திருவருள் இருந்து இயக்குகிறது. மக்கள் அந்தத் திருவரு வளின் கருவிகளாக இருந்து உதவி புரிகிருர்கள்.

ஆதலின் துன்பங்களே நீக்கும் மூல உபகாரியாக இருக் கிறவன் இறைவன்தான். அவனிடத்தில் கேரே போய்க் காலில் விழுந்தால் அவன் அருள் சுரந்து நல்லது செய்வான். சாது ஒருவன் தன்னைத் தேடி வருகிறவர்களே வர வேற்று உபசரிப்பது வழக்கம். அவர்களுக்கு ஏற்றபடி உபசாரம் செய்யப் பொருள் இல்லாமையால் அரசனிடம் போய்ப் பொருள் கேட்டு வாங்கி வரலாம் என்று போளுன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிற்றம்பலம்.pdf/49&oldid=563192" இலிருந்து மீள்விக்கப்பட்டது