பக்கம்:சிற்றம்பலம்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முகவுரை

சைவத் திருமுறைகள் பன்னிரண்டிலும் முதல் மூன்று திருமுறைகள் திருஞானசம்பந்தப் பெருமான் திருவாய் மலர்க் தருளியவை. இந்த மூன்று திருமுறைகளிலும் இப்போதுள்ள பதிகங்கள் 383. இவற்றில் முதல் கிருமுன்:றயில் 136 கிருப்பதிகங் களும், இரண்டாம் கிருமுறையில் 125 பதிகங்களும், மூன்றுக் திருமுறையில் 125 பதிகங்களும் அடங்கியுள்ளன. திருமுறை கண்ட புராணத்தில் நம்பியாண்டார் நம்பிகள்,

' பண்புற்ற திருஞான சம்பந்தர் பதிகம்முந் நூற்

றெண்பத்து தான் கிஞ ல் இலங்கு திரு முறை மூன்று' (25,

வகுத்ததாக ஒரு செய்தி இருக்கிறது. 384 பதிகங்கள் என்று அங்கே காணப்படினும் அடங்கன் முறையில் 883 பதிகங்களே இருக்கின்றன. விட்டுப்போன பதிகம் இன்னதென்று தெரிய வில்லை. அரசாங்கத்தின் முயற்சியால் கல்வெட்டுகளை ஆராயும் ஆராய்ச்சி தொடங்கியபிறகு கிருவிடைவாய் என்னும் தலத்துக் குரிய திருஞானசம்பந்தர் தேவாரப் பகிகம் ஒன்று கல்வெட்டி விருந்து கிடைத்தது. அது நம்பியாண்டார் நம்பிகள் வகுத்த பதிகங்களில் அடங்காததென்றே தோன்றுகிறது. இராச ராச சோழனும் நம்பியாண்டார் நம்பிகளும் கில்லேத் திருக்கோயிலில் தேவாரம் எழுகியிருந்த ஏட்டுச் சுவடியைக் கண்டுபிடித்து எடுத்த போது அவ்வேடு கறையானுல் மூடப்பட்டிருந்தது. பிறகு எண் ணெயை ஊற்றிக் கறையா8னப் போக்கி ஏட்டை எடுத்துப் பார்க் கும்போது பல பதிகங்கள் சிதைந்திருந்தன. அதைக் கண்டு மன்னன் வருந்தியபோது, 'ஈண்டு வேண்டுவன வைத்தோம்" என்று அசரீரி வாக்கு எழ, அப்பால், கிடைத்தவற்றை ஒழுங்கு படுத்தத் தலைப்பட்டார்கள். இந்தச் செய்கியைப் பின்வரும் பாடல்கள் தெரிவிக்கின்றன. .

ஐயர் தட மாடும்.அம் பலத்தின் மேற்பாள்

அருள் பெற்ற மூவர்தம தருள் சேர் செய்ய கையதுவே இலச்சினையாய் இருந்த காப்பைக்

கண்டவர்கள் அதிசயிப்பக் கடைவாய் நீக்கிப் பொய்யுடையோர் அறிவுதனப் புலன்கள் மூடும் பொற்பதுபோல் போதமிகும் பாடல் தன் ஆன தொய்யசிறு வன்மீகம் மூடக் கண்டு

தொடிப்பளவி fைற்சிந்தை நொந்த வேந்தன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிற்றம்பலம்.pdf/5&oldid=563148" இலிருந்து மீள்விக்கப்பட்டது