பக்கம்:சிற்றம்பலம்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இணையடி

குறிஞ்சி கிலம்; அதிலும் மலேயடிவாரம். அங்கே அழகிய திருக்கோயில்; அதன்கீழ் அழகிய ஆறு. எல்லாம் சேர்ந்து பார்க்கும்போது எத்தனே அழகிய காட்சியைத் தருகின்றன. மலேயே அழகு. இறைவன் இயற்கையிலே படைத்த அழகெலாம் ஒருங்கே திரண்ட இடம் அது. மேகம் வந்து தங்கி மழை பொழிவதும், பிற இடங்களெல் லாம் வறண்டு போனலும் அந்த மழையால் வளம் பெற்று விளங்குவதும் மலை அல்லவா?

காளத்தி மலை மிகப் பெரிய மலை அன்று; ஆனாலும் அழகிய மலே. அதன் அடியில்தான் திருக்காளத்தி நாதர் கோயில் இருக்கிறது. மலையின்மேல் மலைக் கொழுந்தாக எழுந்தருளியிருக்கும் சிவபெருமானுக்குத் தம் கண்ணே இடங்து அப்பிய கண்ணப்பர் பெருமை பல நூல்களில் பரவியிருக்கிறது. -

கோயில் பொன்முகலிக் கரையிலே விளங்குகிறது. சுவர்ணமுகி என்று வடமொழியில் அந்த ஆற்றின் பெயரை வழங்குகிருர்கள். பொன்னே முகந்துகொண்டு வருவதல்ை பொன்முகவி என்று பெயர் வந்தது போலும்! அந்தப் பெயர் முகலி என்றும் சுருக்கமாக வழங்கும். பொன் முகலியின் கரையினில் சிவபிரான் உமாதேவியாரோடும் எழுந்தருளி யிருக்கிருன்.

நல்ல மழை பெய்து பொன் முகலியில் வெள்ளம் வரும்போது பார்த்தால் எவ்வளவோ அழகாக இருக்கும். அந்த அழகில் கண்ணுடையவரெல்லாம் சொக்கி நிற்பார் கள். கவிக் கண்ணுடையவர்களோ அந்த வெள்ளத்தின் ஒட்டத்தோடு தம்மிடம் கவிதை யூற்றும் பெருக கிற்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிற்றம்பலம்.pdf/52&oldid=563195" இலிருந்து மீள்விக்கப்பட்டது