பக்கம்:சிற்றம்பலம்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 சிற்றம்பலம்

கோயிலும் பொழிலும் ஆறும் அம்மையும் அப்பனும் ஒன்றிய காட்சி படமாகப் படிகிறது. நாளடைவில் மலை மறைகிறது; பொழில் மறைகிறது; ஆறும் கோயிலும் மறைகின்றன; தேவியின் கோலமும் இறைவன் திருக் கோலமும் மறந்து போகின்றன. ஆல்ை அவனுடைய இணையடிகள் மாத்திரம் மறவாமல் மனத்தில் கிற்கின்றன. மற்றவற்றை நினைக்கும்போது படலம் போர்த்தவை போலத் தோன்றுகின்றன. ஆல்ை இறைவன் இணையடி களோ மனத்திலே முளைத்தவைபோல மங்காமல் பொலி வுடன் இருக்கின்றன.

இந்த நிலையைச் சம்பந்தர் சொல்கிருர், சந்தமார் அகிலொடு சாதிதேக் கம்மரம் உந்துமா முகலியின் கரையினில் உமையொடும் மந்தமார் பொழில்வளர் மல்குவண் காளத்தி எந்தையார் இணையடி என்மனத்து உள்ளவே. சந்தனம், கிடைத்தற்கரிய அகிலோடு சாதி மரம், தேக்க மரம் ஆகியவற்றைப் பறித்துத் தள்ளிக் கொண்டு வரும் பொன் முகலியின் கரையினில் (அமைந்த கிருக் கோயிலில்) உமாதேவி யோடும் (அமர்ந்தருளிய) மந்த மாருதம் நிரம்பிய பொழில் வளர் வதும் வளம் மல்குவதுமாகிய காளத்தியப்பருடைய இரண்டு திருவடிகள் என் மனத்தில் என்றும் மறவாதவண்ணம் உள்ளன. சந்தம் - சந்தன மரம். ஆரகில் அரு அகில் கிடைத்தற் கரிய அகில்; கிரம்பிய அகில் என்பதும் பொருங்தும். சாதி - சாதி மரம். தேக்கம்மரம். விரித்தல் விகாரம். உந்தும் தள்ளும். வெள்ளம் வந்த போது பெரிதாகத் தோற்றுதலின் 'மாமுகலி என்ருர்; மா - பெரிய முகவி பொன் முகலியாறு. உமை யொடும் எழுந்தருளியுள்ள எந்தையார், காளத்தி எந்தையார் என்று கூட்டுக. மந்தம் - மந்த மாருதம். ஆர் - பொருந்திய,

'மந்தம்வந் துலவுசீர் மாமழ பாடியே.” (கிருஞான. 8-ஆம் கிருமுறை.) . . . .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிற்றம்பலம்.pdf/56&oldid=563199" இலிருந்து மீள்விக்கப்பட்டது