பக்கம்:சிற்றம்பலம்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்லா நெஞ்சு

திருவள்ளுவருக்குக் கல்வியினிடத்தும் கற்ரு.ரிடத்தும் மிக்க அன்பு உண்டு. கல்வி வேண்டுமென்று ஒர் அதிகார்த் தாற் சொன்னது போதாதென்று, கல்லாமை கூடாது என்றுமற்ருேர் அதிகாரத்தால் சொல்கிருர். கல்லாதவரைக் கண் இல்லாதவரென்றும், அவர்களுடைய கண்கள் புண் களுக்கு ஒப்பானவை என்றும், அவர்கள் அவை யேறத் தகுதியில்லாதவரென்றும், பயவாத களர்கிலம் போன்றவ ரென்றும், அவர்கள் அழகு மண்பொம்மையின் அழகுக்குச் சமானம் என்றும், அவர்கள் பால் செல்வமிருந்தும் பய னில்லையென்றும், அவர்களே விலங்கோடு சேர்த்து எண்ண வேண்டுமென்றும் சொல்கிருர். உண்மையாகக் கற்றதன் பயன் வாலறிவனகிய இறைவனுடைய தாளேத் தொழுதல் என்று தம் நூலின் தொடக்கத்திலே அறிவுறுத்துகிரு.ர்.

கல்லாதாருடைய நெஞ்சம் நல்ல நெஞ்சம் அன்று. மனத்தை நடுநிலைமையில் வைத்து, விருப்பு வெறுப்பு இன் றிக் கற்பதுதான் கல்வி. அத்தகைய கல்வியினுல் அறிவு மிகும்; உள்ளம் திருந்தும்.

பள்ளிக்கூடத்தில் கற்பதுதான் கல்வி என்று பலர் எண்ணுகின்றனர். மெய்யறிவு மிகுவதற்கு ஏதுவாகவும், நடுநிலைமையை உண்டாக்குவதுமாகிய கல்வியே கல்வி யாகும். -

தொட்டன்த் துாறும் மணற்கேணி, மாந்தர்க்குக்

கற்றனைத் துாறும் அறிவு' என்று திருக்குறளும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிற்றம்பலம்.pdf/58&oldid=563201" இலிருந்து மீள்விக்கப்பட்டது