பக்கம்:சிற்றம்பலம்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்லா நெஞ்சு 43

".................கெஞ்சத்து

நல்லம்யாம் என்னும் நடுவு நிலைமையாற்

கல்வி அழகே அழகு” என்று காலடியாரும் கூறுபவற்றைக் காண்க.

அறிவுடையார் இறைவனே எண்ணி அவனுடைய திருவருளே அடையவேண்டும் என்ற ஆர்வம் மிகப் பெறு வார்கள். தம் உள்ளத்திலுள்ள மாசைக் களைவார்கள். அப்படிச் செய்யாதார் கல்வி கற்ருரேனும் அவர் கல்வி. போலிக் கல்வியாகும். --

கல்வியினால் அறிவுவிளக்கம் பெற்ற கெஞ்சில் இறை வன் எழுந்தருளியிருப்பான், எல்லோருடைய உள்ளத்தி லும் அவன் இருந்தாலும், இருட்டறையிலே இருப்பவனே. அவன் அருகில் சிற்பவனும் காணமுடியாததுபோலக்கல்வி யில்லாதாருடைய உள்ளத்தே அறியாமை இருளில் அவ னேக் காண ஒண்ணுது. கல்வியின் துணேகொண்டு அறிவா கிய விளக்கை ஏற்றிவைத்த கெஞ்சத்தில் இறைவன் தன் அருள் வெளிப்படுமாறு இலங்குவான். *

"எல்லா உயிர்க்கும் இறைவனே ஆயினும்

கல்லாகார் கெஞ்சத்துக் காணஒண் சூறதே'

என்பர் திருமூலர். -

கல்லாதவர்களுடைய கெஞ்சம் மரக்கட்டை போன் றது. இறைவனுடைய அருளாகிய மின்சாரம் எவ்விடத் தும் பாய்ந்தாலும் அதனைத் தன்பால் ஏற்றுக்கொள்ளும் இயல்பு மரக்கட்டைக்கு இல்லே. இறைவன் இந்தா இக்கா, என்று கொடுத்தாலும் அப்படிக் கொடுப்பதைக் காணுத கண்ணும் வாங்கிக்கொள்ள இயலாத கையும் உடையா ரைப் போன்றவர்கள், உண்மைக் கல்வியைக் கல்லாதவர்

  • திருமந்திரம், 812. 4
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிற்றம்பலம்.pdf/59&oldid=563202" இலிருந்து மீள்விக்கப்பட்டது