பக்கம்:சிற்றம்பலம்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 சிற்றம்பலம்

கள். ஆதலின் ஞான சம்பந்தரும் திருமூலரோடு சேர்ந்து கொண்டு, . . "

கல்லா நெஞ்சில் நில்லான் ஈசன் என்று சொல்கிருர்,

. இறைவனப்பற்றி எண்ணும் நெஞ்சமே கல்லாதவ ருக்கு இல்லையென்ருல் அவர்கள் எங்கே அவன் திருநாமத் தையும் திருப்புகழையும் சொல்லப்போகிருர்கள்? அவன் திருநாமத்தைச் சொல்வோர் ஆயிரமாயிரம் பேர் இருந்தா லும் அவர்களோடு பயிலும் பாக்கியம் அவர்களுக்கு இல்லை. அவர்கள் தம்மைப் போன்றவர்களோடு பயின்று அவர்களேயே நல்லவர்களாகக் கானும் இயல்புடையவர் கள். அதனல் திருமூலர் மிக்க சினத்தோடு பின்வருமாறு சொல்கிருர்:

'கல்லாத மூடரைக் காணவும் ஆகாது -- - கல்லாத மூடர்சொற் கேட்கக் கடன் அன்று கல்லாத மூடர்க்குக் கல்லாதார் நல்லராம் கல்லாத மூடர் கருத்தறி யாரே.”

ஞானசம்பந்தப் பெருமான் ஈசனது தொடர்புடைய' பொருள்களையே நாடுபவர். உலகில் எத்தனையோ சிறந்த இடங்கள் இருந்தாலும், இறைவனுடைய ஆலயங்கள் உள்ள தலங்களையே நாடிச் சென்ருர், எத்தனையோ மக் கள் வாழ்ந்தாலும் இறைவன் அடியார்களேயே தமர்களாகக் கொண்டு ஒழுகினர். கல்வியினலும் கேள்வியிலுைம் றிவு விளக்கம் பெற்று இறைவனடி பேணினவர்களைப் ليكيه பெரியோராக எண்ணி மதித்தார்.

'கற்றல் கேட்டலுடை யார்பெரி யார்.அவர்

கையால் தொழுதேத்தப் -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிற்றம்பலம்.pdf/60&oldid=563203" இலிருந்து மீள்விக்கப்பட்டது