பக்கம்:சிற்றம்பலம்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்லா நெஞ்சு 5}:

பெற்றம் ஊர்ந்தபிா மாபுரம் மேவிய - பெம்மான் இவன் அன்றே"

என்று தாம் பாடிய முதல் திருப்பதிகத்திலே கற்றல் கேட் டல் உடையாரைப் பெரியார் என்று பாடிஞர். ی

அவருக்கு ஈசன் கில்லாத, கல்லாத நெஞ்சுடையாரோடு பழகப் பிடிக்குமா? எப்போதும் இறைவனே எண்ணுவா ரோடும், அவன் திருகாமத்தைப் பேசுவாரோடும், அவனே வணங்குவாரோடும் சேர்ந்து வாழும் பெரியார் அவர். அடியார் கூட்டத்தில் இருப்பதையே சிவலோகத்தில் வாழும் வாழ்வாகக் கருதுபவர்.

ஆகவே, கல்லாத கெஞ்சத்தை உடையவரும், இறை வன் புகழைச் சொல்லாதாரும் இருக்கும் இடத்தில் சம்பக் தருக்கு என்னவேலே அடியாரோடு நல்லவராக இருக்கும் அப்பெருமான் இறைவன் பேர் சொல்லாதவரோடு அல்லவ ராகத்தான் இருப்பார். -

அடியாருக்கு வேண்டியவர்; அல்லாதாருக்கு வேண் டாதவர் என்று சொல்வதில் ஒரு பெருமை உண்டு. அல் லாதவரை வெறுப்பவர் அல்ல; அவரை விரும்புபவரும் அல்ல. 'இறைவன் திருகாமத்தைச் சொல்லாதாரோடு நாம் இனம் அல்லோம்" என்று திருஞான சம்பந்தர் பாடுகிருர், - - . . . .

கல்லா நெஞ்சில் நில்லான் ஈசன்; சொல்லா தாரோடு அல்லோம் யாமே.” கல்லாத கெஞ்சில் ஈசன் நிற்கமாட்டான். (அத்தகைய நெஞ்சுடையவராகி அவனுடைய கிருநாமத்தைச்) சொல்லாதா ரோடு யாம் ஒன்றுபடும் இனம் அல்லோம். அல்லோம் - இனம் அல்லோம்.) : " . . . . . . .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிற்றம்பலம்.pdf/61&oldid=563204" இலிருந்து மீள்விக்கப்பட்டது