பக்கம்:சிற்றம்பலம்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5% சிற்றம்பலம்

'கற்ற கெஞ்சம் படைத்தவர், இறைவன் எழுத்தரு ளும் நெஞ்சம் படைத்தவர், இறைவன் திருநாமத்தைச் சொல்பவர் ஆகிய அடியாரோடு காம் சேர்ந்திருப்போம். கல்லாத கெஞ்சமும் இறைவன் கில்லாத நெஞ்சமும் படைத்து அவன் திருநாமத்தைச் சொல்லாதவரோடு நாம் அவரல்லாதாராவோம்; அவரோடு ஒருசேர வைக்கும் இனம் அல்லோம் ஆவோம்" என்கிருர் ஆளுடைய பிள்ளேயார்.

அடியார் அனைவருக்கும் இதுவே இயல்பாதலின் அவர் களையும் சேர்த்தே யாம்' என்று பன்மையால் சொன்னர்.

இந்தத் திருப்பாட்டையுடைய திருப்பதிகம் எந்தத் தலத்தையும் சார்த்திப் பாடாத பொதுப்பதிகம். இப் பாட்டின் அடி ஒவ்வொன்றிலும் இரண்டே சீர்கள் உள்ளன. இரண்டு சீருள்ள அடிக்குக் குறளடி என்று பெயர். இந்தப் பாட்டைப்போல வேறு பல பாடல்கள் ஞானசம்பந்தர் தேவாரத்தில் உள்ளன. மந்திரத்தைப் போலச் சுருங்கிய உருவத்தில் அமைந்தமையால் இதனையே மந்திரம் என்று சொல்லிவிடலாம். திருமந்திரம் என்ற நூல் அத்தகைய பெருமை உடைமையால்தான் அப்பெயர் பெற்றது. -

நிறைமொழி மாந்தராகிய சம்பந்தர் ஆணேயினம்* கிளந்த மறைமொழியாதலின் மந்திரம் t என்று கூறுதல்

  • நடுவிரு ளாடு மெந்தை நனிபள்ளி யுள்க வினைகெடுதல் ஆணோமதே', 'ஆனசொல் மாலேயோதும் அடியார்கள் வானில் அரசாள்வர் ஆணே நமதே", "அல்லலோ டறுவினை யறுத லானேயே', 'அந்தவுல் கெய்கிஅர சாளுமது வேசரதம் ஆணே நமதே", "வானிடை வாழ்வர் மண்மிசைப் பிறவார் மற்றிதம் காணேயும் நமதே' என்று ஞானசம்பந்தப் பெருமான் திருப்பதி கங்களில் உள்ள திருக்கடைக்காப்புக்கள் இங்கே கினைப்பதற். குரியன. *

1. கிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த, மறைமொழி தானே மந்திரம் என்ப" (சொல்காப்பியம், செய்யுளியல்.)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிற்றம்பலம்.pdf/62&oldid=563205" இலிருந்து மீள்விக்கப்பட்டது