பக்கம்:சிற்றம்பலம்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆர நல்குபவர் 55

இறைவனிடம் பக்தி உடையவர்கள் தமக்கு வேண்டி யதை அவனிடம் விண்ணப்பித்துக் கொள்வார்கள். அவன் அருளால் வேண்டியது கிடைத்தால் மிக்க மகிழ்ச்சி கொள்வார்கள். கிடைக்காவிடின் வருந்துவார்கள்; ஆனல் இறைவனிடம் உள்ள அன்பிலே தளர்ச்சி உண்டாகாது. கொடுத்தால் விரும்பி அணேதலும், கொடுக்காவிட்டால் விலகுதலும் வாணிக மனப்பான்மை. அதனே அன்பென்று சொல்லுதல் கூடாது. - -

கினைத்தது கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் அன்பிலே சிறிதும் தளர்வின் றி கிற்கும் அன்பர்களே மாசு இல்லாத் தொண்டர்கள். அத்தகைய தொண்டர்கள் இறைவன் அருளால் தாம் வேண்டியவற்றைப் பெருமல் இருப்பது மிக அருமை. - . . . ."

திருஞானசம்பந்தமூர்த்தி நாயனர், அன்பர்கள் வேட் கையை அறிந்து இறைவன் கிறைவேற்றும் வண்மையைப் பாராட்டுகிருர், தன் காதலன்பால் ஒரு பொருளைப் பெற எண்ணிய மனேவி இயற்கையாகச் செய்யும் கடமைகளில் தவருமல் இருப்பதோடு, பின்னும் தன் ஆர்வங் தோன்ற உபசரிப்பது உலகியல்பு. மனித மனத்தின் இயல்பு இது. தொண்டர்கள் எக்காலத்தும் இறைவனுடைய கினேவை மறவாதவர்கள். உலக வாழ்க்கையில் தமக்கு ஒன்று வேண்டுமென்ருல், தாம் ஆசைப்பட்ட அப்பொருளைப் பெறும் இடம் இறைவனேயன்றி வேறு இல்லே என்று உணர்பவர்கள். ஆகவே அவர்களுக்கு ஏதேனும் வேண்டு மென்று ஆசை உண்டானவுடன் தம் ஆசையை வெளிப் படுத்த சினேக்கிருர்கள். இறைவனுக்குப் பூசை செய் கிருர்கள். வழக்கமாகச் செய்யும் வழிபாட்டை விடச் சிறப்பாகச் செய்கிருர்கள். அவர்கள் உள்ளத்தில், "இது கிடைக்காவிட்டால் இவனே மறப்போம்" என்ற மாசு இல்லை. இது வேண்டுமென்ற ஆசை எழுந்தவுடன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிற்றம்பலம்.pdf/65&oldid=563208" இலிருந்து மீள்விக்கப்பட்டது