பக்கம்:சிற்றம்பலம்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆர நல்குபவர் - 59

கருகா ஆர்எம் ஈசர் வண்ணம்எரி யும்ளரி வண்ணமே. - (திருக்கருகாவூரில் எழுந்தருளி யிருக்கும். சிவபெருமா னுடைய மேனியின் கிறம் எரிகின்ற தீயைப்போன்ற வண்ணம் ஆகும். வண்ணம் - கிறம்; தன்மை. எரி - நெருப்பு.)

திருக்கருகாவூர் என்பது சோழநாட்டில் உள்ள தலம். பாபநாசம் என்ற ரெயில் வண்டி கிலேயத்துக்குத் தெற்கே நான்கு மைல் தூரத்தில் உள்ளது. இப்போது திருக் களாவூர் என்று இதன் பெயர் வழங்குகிறது. வெட்டாறு என்ற ஆற்றின் தென்கரையில் இருக்கிறது. இந்தத் தலத் துக்கு முல்லே வனம் என்ற பெயரும் உண்டு. - -

கடிகொள் முல்க்கம ழுங்கரு காவூர் என்றும், - - கைதன் முல்லகம் ழுங்கரு காவூர் என்றும்,

கந்த மென வல்கம முழங்கரு காவூர் என்றும்,

கார்த்தண் முல்லைகம முழங்கரு காவூர் என்றும் இத்தலத் திருப்பதிகப் பாடல்களில் ஞானசம்பக் தர் குறிப்பிடுகிரு.ர்.

இத் திருத்தலத்திற்கு ஞானசம்பந்தர் திருப்பதிகம் ஒன்றும், திருநாவுக்கரசர் திருப்பதிகம் ஒன்றும் உள்ளன.

மாசில் தொண்டர்மலர் கொண்டு வணங்கிட ஆசை ஆரஅருள் நல்கிய செல்வத்தர்; காய்சி னத்தவிடை யார்;கரு காவூர்எம் ஈசர் வண்ணம்எரி யும்எரி வண்ணமே. | (செல்வத்தர், விடையார், ஈசர் ஆகிய இறைவருடைய வண் ணம் எரிவண்ணம் என்று கூட்டவேண்டும். எரியும்மெரி வண்ணமே என்று சொல்லவேண்டும்; இது செய்யுள் ஒசை நோக்கி வந்த விரித்தல் விகாரம்.) . . ." - . .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிற்றம்பலம்.pdf/69&oldid=563212" இலிருந்து மீள்விக்கப்பட்டது