பக்கம்:சிற்றம்பலம்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

y

வழிமொழித் திருவிராகம், கிருமுக்கால், ஈரடி, திருஇயமகம், மாலைமாற்று என்ற வகைப் பாடல்கள் இந்தத் திருமுறையில் இருக்கின்றன. .

தம்முடைய தந்தையார் வேள்வி செய்யும் பொருட்டுப் பொன் பெறுதற்காக ஞானசம்பந்தர் பாடிய பதிகமும், ஆற் றைக் கடக்கப் பாடியதும், பாண்டியனைச் சுரநோய் பற்றும்படி பாடியருளியதும், ஏடு வையையின் எதிரே செல்லப் பாடிய திருப்பாசுரமும், சமணர்களோடு வாதிட இறைவன் அருள் செய்யவேண்டு மென்று வேண்டியதும், கிருமணத்தின்போது பாடியதும், சோதியிற் கலக்குமுன்பு பாடிய நமசிவாயத் திருப் பதிகமும், ஐந்தெழுத்தின் பெருமையைச் சொல்லும் பஞ்சாக்கரப் பதிகமும் இந்தத் திருமுறையில் உள்ளன.

மூன்ருங் கிருமுறையிலிருந்து எடுத்த பதினுெரு பாடல்களுக் குரிய விளக்கத்தை இப் புத்தகத்தில் காணலாம். கில்லே, திருவா வடுதுறை, திருக்கழுமலம், கிருக்கானப்பேர், கிருவேடகம், திருக் காளத்தி, திருக்கருகாவூர், கிருவைகாவூர் என்னும் தலங்களைப் பற்றிய பாடல்கள் எட்டும், பொதுப் பாடல்கள் மூன்றும் இங்கே விளக்கம் பெறுகின்றன.

தமிழ் நாட்டில் தேவாரம் எழுந்ததற்கு முன்பே சிவால யங்கள் இருந்து வந்தன. அடியார்கள் அவ்வவ்வூர்களிலிருந்து ஆலய வழிபாடு செய்து வந்தார்கள். தமிழர்களுக்குக் கடவுள் உணர்ச்சியும் கடவுள்பால் அன்பும் பல காலமாக இருந்து வருகின்றன. இப்போது கிடைக்கும் நூல்களில் மிகப் பழையது தொல்காப்பியம் என்னும் இலக்கணம் , அதற்கு அப்பால் எழுந்த நூல்களில் பழையவை கடைச்சங்க நூல்கள் என்று வழங்கும் பத்துப் பாட்டு, எட்டுத் தொகை என்னும் தொகை நூல்கள். இந்த நூல்களிலுள்ள குறிப்புகளைக் கொண்டு பார்த்தால் தமிழ் மக்கள் சிவபிரான், முருகன், கிருமால், பல தேவர், காளி, இந்திரன், வருணன், கதிரவன் முதலிய தெய் வங்களே வணங்கி வந்தார்களென்பது தெளிவாகும். தெய்வங் களுக்கு உருவம் அமைத்தும், மரம் முதலியவற்றில் எழுந்தருளி யிருப்பதாகக் கொண்டும் வழிபட்டார்கள், மரத்தினடியில் திரு வுருவங்களே வைத்து'வணங்கினர். கடவுளைப் பூசிக்கும் வழக்கத் தையுடைய சில வகுப்பினர் இருந்தனர். மதுரை, திருப்பரங் குன்றம், கிருச்சிசல்ேவாய், திருவாவினன்குடி, பழமுதிர் சோலை மல்ே, திருவேரகம், கிருமருதந்துறை, புகார், காஞ்சீபுரம் முதலிய தலங்களில் தெய்வங்களின் கிருக்கோயில்கள் இருந்தன என்பதை மேலே சொன்ன நூல்களால் உணரலாம். வரவரப் பிற்காலத்தில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிற்றம்பலம்.pdf/7&oldid=563150" இலிருந்து மீள்விக்கப்பட்டது