பக்கம்:சிற்றம்பலம்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவைந்தெழுத்து 铬盘

இந்தக் காதல் இருந்தால் அதற்ை பற்றப் பெற்ற வரிடத்தில் ஒருவகை உள்ள நெகிழ்ச்சி உண்டாகும். அவரோடு தொடர்புடைய எல்லாப் பொருளிடத்தும் விருப்பம் அமையும். அந்தப் பொருள்களே கன்ருகப் பயன் படுத்திக் கொள்வர். -

இறைவனுடைய திருவுருவங்களேயும் அவற்றை வைத்து வழிபடும் கோயில்களையும் தரிசிக்கும்போது பக்தி உணர்ச்சி மிக்கு அதனுல் இன்புறுவார்கள் அன்பர்கள். ஏனேயோர்களுக்கு அந்த அநுபவம் இராது. கடராஜத் திருக்கோலத்தைக் கண்ட சுந்தரமூர்த்தி கா ய ளு ர் அடைந்த பேரின்ப அதுபவத்தைச் சேக்கிழார் பின்வரு மாறு சொல்கிருர்: s

'ஐந்துபே ரறிவும் கண்களே கொள்ள அளப்பருங் கரணங்கள் நான்கும் சிந்தையே யாகக் குணம் ஒரு மூன்றும்

கிருந்துசாத் துவிகமே ஆக இந்துவாழ் சடையான் ஆடும்ஆ னந்த

எல்லையில் தனிப்பெருங் கூத்தின் வந்தபே ரின் வெள்ளத்துள் கிளைத்து

மாறிலா மகிழ்ச்சியில் மலர்ந்தார்.”* இந்த அநுபவம் சுந்தரமூர்த்தி காயனருடைய திரு வுள்ளப் பக்குவத்தின் விளைவாக உண்டாயிற்று. இறைவ னிடம் அவருக்கு இருந்த காதல் இந்த இன்பத்தை உண் டாக்கியது. பருவம் வராத பெண்ணுக்கு ஆடவன் இருந்தும் பயன் இல்லை. பருவம் வந்த பெண் ஆடவனல் இன்பத்தை அடைவாள். பெண்ணுக்குப் பருவம் இருப் பினும் ஆடவனின்றி இன்பம் இல்லை. அவ்வாறே இறைவ

லுடைய திருவுருவம் முதலியன பக்தியுணர்ச்சி உடையா

ருக்கு இன்பத்தை உண்டாக்குகின்றன; மற்றவர்களுக்கு

. * օտաւրոա, தடுத்தாட்கொண்ட புராணம், 106.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிற்றம்பலம்.pdf/71&oldid=563214" இலிருந்து மீள்விக்கப்பட்டது