பக்கம்:சிற்றம்பலம்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 சிற்றம்பலம்

சொல்லுவது. மூலமாக உள்ளவை மூன்று வேதங்களே. அதனல் வேதத்துக்கு த்ரயீ என்று ஒரு பெயர் உண்டு.*

இந்த மூன்று வேதங்களிலும் நடுவாக இருப்பது யஜுர் வேதம், அவ் வேதத்தின் ஏழு காண்டங்களுள் நடுவுள்ளதாகிய காண்டம் ஏழு ஸம்ஹிதையை உடையது. அந்த ஏழிலும் நடுவாகிய கான்காம் , ஸம்ஹிதையின் நடுவில் ரீருத்திரம் விளங்குகின்றது. அதன் நடுவில் நமசி வாய என்ற பஞ்சாட்சரம் சொல்லப் பெறுகிறது. இதனல் வேதத்தின் இருதயத்தில் நிற்பது திருவைந்தெழுத்து என்று சொல்லலாம். .

இந்தப் பஞ்சாட்சரம் ஐந்து வகைப்படும், ஸ்து.ால பஞ்சாட்சரம், சூகம பஞ்சாட்சரம், காரண பஞ்சாட் சரம், மகாகாரண பஞ்சாட்சரம், மகாமனு என்பவை. அவை. நமசிவாய என்பது ஸ்துால பஞ்சாட்சரம். சிவாய நம என்பது சூக,ம பஞ்சாட்சரம். சிவாய சிவ என்பது காரண பஞ்சாட்சரம். சிவ என்பது மகாகாரண பஞ்சாட்சரம். சி என்பது மகாமனு.

நமசிவாய என்ற மந்திரத்துக்கு, சிவனுக்கு நமஸ் காரம் என்று சொற்பொருள் கூறுவர். ஆயினும் அதன் பொருளையும் தத்துவத்தையும் மிக நுட்பமாகவும் விரிவாக வும் ஆகமங்களும், திருமூலர் திருமந்திரமும், சித்தாந்த சாத்திரங்களும் கூறுகின்றன. -

'நமசிவாய என்றதை மந்திரமாகக் கொள்வதோடன்றி இறைவன் திருநாமமாகவே கொண்டு வழங்குதல் தமிழ் மரபு. - . . . . -

க்ரிவேதபோத காரணன் (தக்வாகங்ாணி, 535 , தையும், அதற்கு, கிரிவேத போத காரணவைான் பிரமா; கிரி வேத மென்றது. மூன்றே வேதம்; காலாவது மங்கிர சாகையான

அதர்வ வேதம் 'கிரைவேதா” என்பது ஹலாயுதம் என்று அதன் உரையாசிரியர் எழுதிய விளக்கத்தையும் காண்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிற்றம்பலம்.pdf/74&oldid=563217" இலிருந்து மீள்விக்கப்பட்டது