பக்கம்:சிற்றம்பலம்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிருவைந்தெழுத்து 67

உண்டாகும்; நற்பயனும் உண்டாகும். அந்தத் திருநாமங் களில் ஒன்ருகவும் மந்திரமாகவும் அமைந்திருப்பது கமசி வாய என்னும் திருவைந்தெழுத்து. அது வேதத்தின் நடுவில் உள்ளது. வேதமென்னும் மாளிகைக்கு நடுவிடமாகவும் வேத புருஷனுக்கு இருதயமாகவும் விளங்கும் நீ ருத்ரத் தின் நடுவே ஒளிர்வது இந்தத் திருவைந்தெழுத்து, ஆதலின் வேதத்தின் உயிர்கிலேயாகிய இதனை வேதங்களின் முடிந்த முடிவாகிய பொருள் என்று சொல்வதில் தவறு இல்லே. இதனே உணர்ந்தே சம்பந்தப் பிரான், - வேதம் நான்கினும் மெய்ப்பொருள் ஆவது

என்று சொல்கிருர், அது மந்திரமாக கினைப்பதற்குரியது. மந்திரத்தை மூவகையில் உச்சரிப்பர். மானஸம், மந்தம், வாசிகம் என்பன அவை. மனத்துக்கண் தியானிக்கும் முறை மானஸம், மெல்லப் பிறர் காதில் கேளாதபடி காவைப் புரட்டி உச்சரித்தல் மந்தம்; வாசிகம் என்பது வெளிப்படையாகச் சொல்லுதல். மந்திரங்களே மானஸ் மாகச் சொல்வது சிறப்பு. ஆயினும் இங்கே இந்த ஸ்துரல பஞ்சாட்சரம் மந்திரமாக அமைந்ததோடன்றித் திருகாம வாய்பாட்டிலும் சொல்லப் பெறுதலின், துதிக்க அமைந்த மற்றத் திருநாமங்களைப் போலவே ஓதிலுைம் கன்னெறி யைத் தரும் சிறப்புடையது. வேதத்தின் மெய்ப்பொரு ளாகிய மந்திரமாக விளங்கும் அதுவே அடியார்கள் காதலாகிக் கசிந்து கண்ணிர் மல்கி ஒதுவதற்குரிய திருநாம மாகவும் இருக்கிறது. -

நாதன் நாமம் நமச்சி

Yor

"ஆறெழுத் தடக்கிய அருமறைக் கேள்வி, நாவியல் மருங் கின் நவிலப் பாடி' என்று திருமுருகாற்றுப்படையில் வருவது இம் முறையே (186-7).

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிற்றம்பலம்.pdf/77&oldid=563220" இலிருந்து மீள்விக்கப்பட்டது