பக்கம்:சிற்றம்பலம்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 சிற்றம்பலம்

தேவாரம் பாடிய மூவரும் நமச்சிவாய என்ற திருவைந்தெழுத்தை வைத்து ஒவ்வொரு பதிகம் பாடி யுள்ளனர். சம்பந்தர் முன்பே பஞ்சாக்கரத் திருப்பதிகம் என்ற ஒன்றை அருளியிருக்கிருர்,

"துஞ்சலும் துஞ்சல் இலாத போழ்கினும்

கெஞ்சகம் நைந்து நினேமின் நாள் தொறும் வஞ்சகம் அற்றடி வாழ்த்த வங்க கூற்று அஞ்ச உதைத்தன அஞ்செழுத்துமே” என்பது அப் பதிகத்தின் முதல் இருப்பாட்டு.

ஈமச்சிவாயத் திருப்பதிகத்தின் முதல் திருப்பாட்டே இங்கே எடுத்துரைத்த பாசுரம். -

காத லாகிக் கசிந்துகண் ணிர்மல்கி ஒது வார்தமை நன்னெறிக் குய்ப்பது வேத நான்கினும் மெய்ப்பொருள் ஆவது நாதன் நாமம் நமச்சி வாயவே.

இப்பதிகம் சம்பந்தர் இறுதியாகப் பாடியது. அவர் திருப்பெருமண கல்லூரில் திருமணம் செய்துகொண்ட போது, மேலும் உலகத்தில் வாழ விருப்பமின்றி,

காதனே நல்லூர் மேவும் பெருமண நம்ப னேஉன்

பாதமெய்க் நீழல் சேரும் பருவம் ஈது' என்று பாட, இறைவன் ஒரு சோதிப் பிழம்பைக் காட்டி ஞர். அதன்கண் தோன்றிய வாயிலூடே ஞானசம்பந்தரும், அவருடைய ஆணேயின்படியே அந்தத் திருமணத்துக்கு வந்த அக்னவரும் புகலாயினர். அப்போது இந்த நமச்சி வாயத் திருப்பதிகத்தை ஆளுடைய பிள்ளையார் பாடினர்.

"ஞானமெய்ந் நெறிதான் யார்க்கும் நமச்சிவா யச்சொ லாம்என்று

பெரிய புராணம், திருஞான. 1245,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிற்றம்பலம்.pdf/78&oldid=563221" இலிருந்து மீள்விக்கப்பட்டது